ஜிஎஸ்டியை பாராட்டி பரிசு கொடுத்த மன்மோகன் சிங்: பியூஸ் கோயல் வரவேற்பு

ஜிஎஸ்டி கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசுகிறார்கள். தற்போது ஜிஎஸ்டி குறித்து மன்மோகன் சிங் பாராட்டியது வரவேற்கக்கூடியது என பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

  • ஜிஎஸ்டி குறித்து மன்மோகன் சிங் பாராட்டியது வரவேற்கக்கூடியது
  • மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி.
நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியது வரவேற்புக்குரியது என மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று தமிழகம் வந்தார். madurai விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“அதிமுக, பாமக, தேமுதிக, என மெகா கூட்டணி அமைத்துள்ளோம். பிரதமர் மோடி வலிமையான பிரதமராக பணியாற்றி வருகிறார். 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கணக்கெடுப்பு முடிவுகள் வருகின்றன.

யாரெல்லாம் நாட்டின் மீது அக்கறை வைத்திருக்கிறார்களோ அவர்களைக் கொண்டுதான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் நாட்டுக்கு பணியாற்ற தயாராக உள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தில் பணியாற்றி மத்தியில் மோடி மீண்டும் பிரதமராக உழைக்க காத்திருக்கின்றனர்.

பாஜகவின் நோக்கம் ஊழலற்ற பொருளாதார வளர்ச்சி. அதனால்தான் மாநில அரசுகளின் துணையோடு ஜிஎஸ்டியை அமல்படுத்தினோம். இதை காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்த முடியவில்லை என்பதால் பொறாமைப்படுகிறார்கள். ராகுல் காந்திக்கு பொருளாதாரத்தை பற்றி சிறிதளவு ஞானம் இருக்கிறது. gst கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசுகிறார்கள். தற்போது ஜிஎஸ்டி குறித்து மன்மோகன் சிங் பாராட்டியது வரவேற்கக்கூடியது. நாளை தொகுதிக்கான இறுதி பட்டியலை வெளியிடுவோம்.” என்று தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *