பசி போக்கும் இளைஞருக்கு லண்டன் காமன்வெல்த் விருது

 பசி போக்கும் இளைஞருக்கு லண்டன் காமன்வெல்த் விருது
 
  • கோவை:கோவையை சேர்ந்த, ‘நோ புட் வேஸ்ட்’ அமைப்புக்கு, லண்டன் காமன் வெல்த் விருது வழங்கப்பட்டது.காமன் வெல்த் அமைப்பு, கடந்த, 13 ஆண்டுகளாக, 53 காமன் வெல்த் நாடுகளில், சமூக முன்னற்றத்துக்காக சிறப்பாக செயலாற்றி வரும், 15 முதல், 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களை சர்வதேச அளவில் கவுரவித்து, ‘காமன் வெல்த் இளைஞர் விருது’ வழங்கி வருகிறது.ஐக்கிய நாடுகள் சபையின், நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 2019ம் ஆண்டுக்கான விருதுக்கு, 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்ததில், இறுதி சுற்றுக்கு, 16 சமூக மேம்பாட்டு திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
  • லண்டனில், காமன்வெல்த் தலைமையகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில், பிராந்தியத்துக்கு ஒன்று வீதம், நான்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில், கோவையை சேர்ந்த, ‘நோ புட் வேஸ்ட் அமைப்பு’ பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.விழாக்களில் பரிமாறாமல் மீதமாகும் உணவை பெற்று, ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு வழங்கும் சமூக பணிக்காக, இவ்விருது கொடுக்கப்பட்டது.
  • பசியை விளக்க வார்த்தை இல்லை
  • விருது பெற்ற பத்மநாபன் கூறுகையில், ”பசியின் வலியை இவ்வுலகில் எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை. இவ்விருது, ‘நோ புட் வேஸ்ட்’ அமைப்புக்கு, கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பரிசுத்தொகையை கொண்டு, நாங்கள் உருவாக்கிய செயலியை மேம்படுத்தி, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களிலும், இத்திட்டத்தை செயல்படுத்துவோம்,” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *