2019 பாஜக கரை சேருமா அல்லது காணா போகுமா?  –   ஆர்.கே.

 

2019  ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் கடும் போட்டியை உருவாக்கும் களமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  காரணம்  எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி. அது எப்படியாவது பிரதமர் மோடியை அகற்றி எதிரணியினர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் எதிர்பார்த்த மாற்றங்களை பாஜகாவால் ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பில் படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலை  வாய்ப்பு என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். மொத்தமே 60 லட்சம் வேலை வாய்ப்பை தாண்டவில்லை.

காரணம் தவறான பொருளாதாரக் கொள்கை என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக பணமதிப்பிழப்பைத் தொடந்து கொண்டு வந்த ஜிஎஸ்டி சிறு, குறு தொழில் சாலைகளை மூட வைத்துள்ளது.  லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக திருப்பூர், கோவை மாட்டங்களில் வேலை இழப்பு, நிறுவன மூடல் அதிக அளவில் இருந்துள்ளது. இதே நிலை ஒட்டு மொத்த இந்தியாவிலுமே அதிக அளவிமே நீடித்துள்ளது.

அடுத்ததாக விவசாயிகள் பிரச்னை, விளைபொருள் சரியான விலை நிர்ணயம் இல்லாதது, உர மானியம் சரியாக செல்லாதது. வறட்சி நிவராணம் கிடைக்காதது என்று  உச்சப்பட்ச போரட்டங்களை அகில இந்திய அளவில் விவசாயிகள் நடத்தி முடித்துள்ளனர்.

இந்த அரசாங்கம் விவசாயிகள் பிரச்னையிலும் தோல்வியையே கண்டுள்ளது. ஒரு நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயம் மற்றம் தொழில் முடங்கினால் நாட்டின் பொருளாதாரம் முடங்கி வேலைவாய்ப்பு மந்தமாவது இயற்கை. அதுவே நடந்துள்ளது.

இவை வரப்போகும் தேர்தலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். பாஜக தேறுமா? அல்லது அடிக்கும் புயலில் காணா போகுமா என்பது இன்னும் 100 நாட்களில் தெரிந்து விடும்.

எதிர்கட்சியினர் ஆட்சியாளர்களின் மக்கள் எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களை வைத்து திட்டம் தீட்டி, அடிப்படை வாழ்வாதாரத்திற்காக மாதம் 12000 ரூபாய் கொடுக்க இருப்பதாகவும், இது யாருக்கு எப்படி கொடுக்க போகிறோம் என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்றும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்போம் என்றும் அடுக்கடுக்காக பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

ஆளும் தரப்போ, கவர்ச்சியான அறிவிப்பு போதாது, பணம் எங்கிருந்து வரும் என்கின்றனர். அதற்கு காங்கிரஸ் பதிலாக மத்திய அரசு மான்யமாக 1.5 லட்சம் கோடி கொடுக்கப்படுகிறது. அதில் பெரும்பான்மையான பணம் செலவிடப்படுவதில்லை. அதை நாங்கள் நேரடியாக மக்களுக்கு வங்கியில் கொடுத்துவிட்டு, மான்யன்களை இரத்து செய்வோம் என்கிறார்.

இப்படியாக அதிரடிகள் வந்து கொண்டிருக்க, கருத்து கணிப்புகளும் வருகின்றன. மோடி தனிப் பெருபான்மை கிடைக்காவிட்டாலும். மெஜாரிட்டியை ஒட்டி  250 சீட்டுகளை பெறுவார் என்றும், காங்கிரஸ் 150 சீட்டுகளை பெறும் என்றம், இதர கட்சிகள் 144 சீட்டுகளை பெறுவார்கள் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது.  ஒன்று மோடியா? இராகுலா? என்ற கேள்வி இல்லை மூன்றாவது அணியில் யாராவது ஒருவாரா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து நிற்கிறது. 2019 வாக்காளர்கள் அதை நிர்ணயிக்க போகிறார்கள். பார்க்கலாம் மோடி தேறுவாரா? இல்லை தேர்தல் களம் பாஜகவை  தோற்கடிக்குமா?  என்று  பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *