10  சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் யுக்தியா?  —- ஆர்.கே

.

பாஜகவின் அதிரடி அறிவிப்பு  வேலைவாய்ப்புகளில் முன்னேறிய சமுதாயத்திற்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கிடு என்று சட்டம் இயற்றியுள்ளது.  இதற்கு பாஜக கூறும் காரணம். இது நீண்ட நாள் கோரிக்கை. இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதைச்  செய்துள்ளோம் என்பதே. காரணம் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கிடு நீண்ட நாள்களாக நடைமுறையில் உள்ளது.  இதன் நீட்சியாக முன்னேறிய சதாயத்தில் பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டியது நியாயமான காரணமாக உள்ளதாக சொல்லி இதை எஅமல்படுத்தியுள்ளனர்.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிசயத்தக்க விஷயம் என்னவென்றால். இதில் தமிழகம் தவிர இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் இதற்கு ஆதரவு என்பது உள்ளது. காங்கிரஸ் உ.பி.யில் உள்ள பகுஜன் சமாஜ் என்கின்ற பட்டியியல் இன வகுப்பு சாதியை சேர்ந்த மயாவதி தலைவியாக இருக்கும் கட்சியும் இதை வரவேற்றுள்ளது.

ஆக இடஒதுக்கிடுக்கு குரல் கொடுத்த, மற்றும் 50 சதவீதம் கூடுதலாக இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் மண்டல் கமிஷன் உத்தரவை மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்திய போது உத்தரவிட்ட உத்தரவை, எதிர்த்து 69 சதவீத  இட  ஒதுக்கீட்டிற்கு  ஆதரவாக உத்தரவை பெற்று,  அதை  அட்டவணை 9ல் சேர்த்த தமிழகம் இதை எதிர்க்கிறது. ஆளும் அதிமுக பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்காது வெளிநடப்பு செய்துள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இதை எதிர்கின்றன. ஆக தமிழகம் மத்திய அரசின் இந்த முடிவில் அனைத்து இந்தியாவிலும் தனித்து நிற்கிறது.

சுதந்திரத்திற்குப்பின் தந்தை பெரியாரால் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இட ஒதுக்கிடு என்ற  சமூக  நீதியை  முதல் முதலாக இந்தியாவில் கொண்டு வந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் திராவிட வழி வந்த ஆட்சியர்கள்.  ஆகையால் இதைக் கடுமையாக எதிர்கிறார்கள்.  இதில் நியாயம் உள்ளது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.  பொருளாதாரரீதியான இட ஒதுக்கிடு என்பதே அரசியல் சாசனத்தில் இல்லை என்பதே இவர்கள் வாதம்.  முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்   ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இதே ஒதுக்கீடு  உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், இது பாஜகவின் தேர்தல் யுக்தி தவிர வேறேதும் இல்லை என்றும் சொல்கின்றனர்.

காங்கிரஸ் மற்றும் ஏனய கட்சிகள் வடமாநிலங்களில் ஆதரிப்பதர்க்கு அங்கு 30 சதவீத முன்னேறி வகுப்பினரின் வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே. அனைத்துக் கட்சிகளும் இதில்  அதரவு  நிலை எடுக்கின்றனர். ஆனால் தமிழத்தில் 15 சதவித வாக்குகளே உள்ளதாகவும். ஆகையால் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, இட ஒதுக்கிடு விவகாரத்தால் பாஜக பயன் பெறுமா? என்பது நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.  பொதுபிரிவில் 10 சதவீதம் ஒதுக்கிவிட்டால் மீதி 40 சதவீதம் தான் பொதுபிரிவாக இருக்கும் இடஒதுக்கீட்டில்,  அதுவும் இது  மாநிலங்களுக்கு மாநிலம் சிறிது வேறுபட்டும் இருக்கிறது. மொத்தத்தில் இச்சட்டம்  உச்சநீதிமன்றத்தில் நிற்காது என்றும்  தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறுகிறார்கள். பார்ப்போம் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கின்றது என்று,

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *