நற்சிந்தனை – நேர்மறைத்தன்மை

இன்றைய சிந்தனைக்கு…….

நேர்மறைத்தன்மை:

எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு இருப்பது, இலேசாக இருப்பதற்கான ஆற்றலை அளிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நம் மனதை எதிர்மறையானவற்றால் நிரப்பிக்கொள்ளும் மனப்போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். அது நம்மை சக்தி இழக்கச் செய்கின்றது. இதனால் சுலபமாக ஆட்கொள்ளப்பட்டு, ஆக்கப்பூர்வமான எண்ணத்திற்கு இடமளிக்காமல் நாம் மனமுடைந்து போகின்றோம்.

செயல்முறை:

நான் சிரமமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஏன் அவ்வாறு நடந்தது என்பதிலோ அல்லது பிரச்சனைகளில் மூழ்கிவிடுவதிலோ சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்வது அவசியம். அதற்கு மாறாக, சூழ்நிலையை விட நான் பலசாலி என்றும் என்னால் அதை எதிர்கொள்ள முடியும் என்றும் உணர்வது அவசியமாகும். பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என நான் சிந்திக்க ஆரம்பித்த உடனேயே, நான் பிரச்சனைகளை தாண்டி பறப்பதற்கான வழியைக் காண்பேன்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *