18 எல்எல்ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு. தினகரனுக்கு பின்னடைவா?  –  ஆர்.கே.

வாராத மாமணிபோல் வராமல் இருந்த தீர்ப்பு இறுதியாக 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தில் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும். இதுதான் நீதிமன்றம் கொடுத்து தீர்ப்பு. இதில் ஆயிரம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்த போதும் தீர்ப்பு என்றால்  தீர்ப்புதான்.  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அவ்வளவே.

இது தினகரன் தரப்புக்கு எதிராக வந்த தீர்ப்பு. தினகரன் என்ன சொல்கிறார்? இந்த தீர்ப்பு எங்களுக்கு ஒரு அனுபவம் என்கிறார். நாங்கள் மேல்முறையீடு செய்து. எங்கள் தரப்பு நியாயத்தை நிலை நிறுத்துவோம் என்கிறார்.

இப்போது 18 இடங்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் சேர்த்து 20 இடங்கள் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தயார். தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை. நாங்கள் மக்கள் மன்றத்தில் மக்களின் ஆதரவை பெற்று  எங்கள் பலத்தை   நிரூப்பிப்போம் என்கிறது தினகரன் தரப்பு. உச்ச நீதிமன்றம் சென்றாலும். மக்கள் மன்றத்தை சந்திக்க தயார் என்கிறது. ஆளும் எடப்பாடி தரப்பும் தயார் என்று சொன்னாலும். உள்ளூர பயத்தில் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் முதல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் வரை தள்ளிப்போட வழிதேடிய கட்சிதான் ஆளும் தரப்பு.  காரணம் எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று சமீபத்திய கருத்து கணிப்புகள் சொல்லுகின்றன. சில தினங்களுக்கு முன் இந்தியா டுடே என்ற பத்திரிக்கையின் தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஆளும் அதிமுகவுக்கு 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதிருப்தியாக  48 சதவீத வாக்குகளை எடப்பாடி பெற்றுள்ளார். பரவாயில்லை என்று 16 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். 46 சதவீத வாக்குகளை பெற்று ஸ்டாலின் அடுத்த முதல்வர் நிலைக்கு முன்னேறியுள்ளார். கருத்துக்கணிப்புகள் கணிப்புப்படி நடப்பதில்லை என்று ஆளும் கட்சி சொல்லும். அதுதான் நடைமுறை. ஆனால் களத்தில் நிலவரம் இதுதான்.

ஆக 20 இடங்களுக்கு முன்கூட்டியே தேர்தலா? இல்லை நாடளுமன்றத் தேர்தலோடு தேர்தலா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் உள்ளது. எல்லாம் மேலே இருப்பவன். அதாவது மோடி பார்த்துக் கொள்ளவார் என்ற நிலையில் இருக்கும் அதிமுக தேர்தலை நடத்தாவிட்டால், 20 இடங்களுக்கு தேர்தல் தள்ளிப்போனால். அது ஆளும் தரப்புக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தும். மக்களின் அதிருப்திக்கு கூடுதலாக ஆளாவார்கள்.

எஜமானர்கள் உத்தரவு வருமா? என்று தெரியவில்லை. எது எப்படியோ இந்த தேர்தல் களம் சூடு பறக்கும். ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் தெரிய வரலாம்.

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப் பட்டாலும். தொண்டர்கள் பலம் அவரிடமே உள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் களம் அதை நிரூபிக்கட்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *