நற்சிந்தனை – பகுத்தறிதல்

 

இன்றைய சிந்தனைக்கு

பகுத்தறிதல்:

உண்மையான சக்தியானது ஒவ்வொரு சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வதில் அடங்கியுள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலை தோன்றும்போது, மனதில் அதிகமான கேள்விகள் தோன்றுகின்றன. பெரும்பாலும் குறிப்பிட்ட சம்பவம் ஏன் நடந்தது என புரிந்துகொள்வது நமக்கு கடினமாக இருக்கிறது. இது நம்மை ஆதரவின்றி குழப்பமடைய செய்கின்றது. அதன் பின் நம்மால் சூழ்நிலையை மாற்றுவதற்கு ஒன்றும் செய்ய இயலாது.

செயல்முறை:

நான் வருகின்ற எந்தவிதமான சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். ஒவ்வொரு சூழ்நிலைக்கு பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. சூழ்நிலை ஏன் நடந்தது என என்னால் புரிந்து கொள்ளமுடியும்போது, அதை எவ்வாறு தீர்ப்பது என்றும் எனக்கு தெரியும். இது மீண்டும் கட்டுப்பாட்டை பெற உதவுவதோடு, அதை வெற்றிகரமாக கவனித்து கொள்வதற்கான சக்தியையும் எனக்கு கொடுக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *