நற்சிந்தனை – நேர்மறை தன்மை

 

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை:

விசேஷதன்மையை பார்பதற்கான நோக்கமானது எதிர்மறைதன்மையிலிருந்து மனதை விடுவிக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நேர்மறைதன்மையை விட எதிர்மறைதன்மையே மிகவும் சுலபமாக பார்க்கப்படுகின்றது. எப்பொழுதெல்லாம் ஒருவர் சில எதிர்மறை அம்சத்தை பயன்படுத்துவதை நாம் காண்கின்றோமோ அப்போது அவர்களுடைய அனைத்து சிறப்புத்தன்மைகளும் மறைந்திருப்பதுடன் அவர்களுடைய எதிர்மறைதன்மையில் நாம் சிக்கிக்கொள்கின்றோம். அந்த நபருடன் நம்முடைய பேச்சுவார்த்தையானது எதிர்மறைதன்மையால் களங்கப்படுவதோடு காரியங்களை சரிசெய்வதும் கடினமாக இருக்கின்றது.

செயல்முறை:

என்னை சுற்றி உள்ளவர்களிடம் நான் நேர்மறையானவற்றை பார்ப்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஒருவர் எதிர்மறையாக எதையாவது சொல்லும்போதோ அல்லது செய்யும்போதோ, நான் ஏதாவது நல்லவற்றை பார்ப்பதற்கு விசேஷமாக முயற்சி செய்வது அவசியமாகும். இது எதிர்மறையானவற்றிலிருந்து என்னை விடுபட்டு இருக்க உதவி செய்வதுடன் அந்த நபருடன் என்னுடைய பேச்சுவார்த்தையை கஷ்டங்களால் நிரப்புவதைக் காட்டிலும் இனிமையாக ஆக்குகின்றது. அநேகமாக, என்னை நோக்கி மற்றவர் நேர்மறையாக பதிலளிப்பதுடன், இதன் மூலம் அவர்களுடைய எதிர்மறைதன்மையை அவர்கள் விட்டுவிடுவதற்கு உதவுகின்றது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *