[:en]நற்சிந்தனை[:]

[:en]

இன்றைய சிந்தனைக்கு

பொறுப்பு:

உண்மையான பொறுப்பு, உள்ளார்ந்த இலேசானதன்மையையும் சந்தோஷத்தையும் கொண்டு வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு காரியத்திற்காகவோ அல்லது ஒரு நபருக்காகவோ பொறுப்பேற்கும்போது, நாம் பாரமாகவோ அல்லது அந்த நபரிடமோ அல்லது சூழ்நிலையிலோ சிக்கிக்கொண்டதாக உணரும் போக்கு நம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் முடக்கப்பட்டவராக உணரும்போது, காரியத்தை இயன்ற அளவு சிறப்பான முறையில் செய்ய இயலவில்லை.

செயல்முறை:

பொறுப்பு என்பது உண்மையில், செய்யவேண்டிய கடமைகள் மட்டுமே அல்ல. ஆனால் அக்காரியத்தில் நேர்மையுடன் பணியாற்றுவதிலும் அனைத்தையும் நோக்கத்தை உணர்ந்து செய்வதிலும் அடங்கியுள்ளது. இந்த மனோபாவத்துடன் நான் பணியாற்றும்போது, காரியங்கள் சுலபமாக நடப்பதையும், ஒவ்வொரு அடியிலும் நான் உதவி பெறுவதையும் காண்கின்றேன். என்னால் அதிக லேசான தன்மையுடன் அதிகமான காரியங்களை செய்ய முடிகின்றது. மேலும் நான் செய்கின்ற அனைத்தையும் நான் ரசிக்கின்றேன்.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *