[:en]நற்சிந்தனை[:]
[:en]
இன்றைய சிந்தனைக்கு
உயர்வாக மதித்தல்:
ஒருவருடைய வளங்களை உயர்வாக மதிப்பது, தொடர்ந்து முன்னேற்றத்தை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்மிடம் இருப்பதை பாராட்டுவதை விட நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளதில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கின்றது. நாம் எப்போதெல்லாம் சவாலான சூழ்நிலைகளை சந்திக்கின்றோமோ அப்போது, நம்மிடம் பற்றாக்குறையாக உள்ளதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தும் போக்கு உள்ளது. நமக்கு இம்மனோபாவம் இருக்கும்போது, நம்மால் எவ்வித முயற்சியும் செய்து சூழ்நிலையை மாற்ற இயலவில்லை. அதன்பிறகு, மற்றவர்களை குறைகூறுவது அல்லது சாக்குபோக்கு சொல்வது போன்ற போக்கு நம்மிடம் உள்ளது.
செயல்முறை:
எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுகளை பாராட்டுவதற்கும், பயன்படுத்துவதற்கும் நான் விசேஷ முயற்சி செய்வது அவசியமாகும். இன்று, ஒவ்வொரு சவாலையும் என்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், என்னிடம் மறைந்துள்ள வளங்களை கண்டுபிடிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக கருதுவேன். இவ்வாறு நான் அதிகமாக செய்யும்போது, நான் அதிகமாக முன்னேறுவதற்கு முயற்சி செய்வேன்.
[:]