[:en]கர்நாடகா தேர்தல் பாஜக எதிர்காலம்?  ——  ஆர்.கே.[:]

[:en]

 

காவிரி பிரச்னைக்கும், கர்நாடக  தேர்தலுக்கும்  ஏதோ தொடர்பிருப்பது போல,  தேவையில்லாமல்  சுப்ரீம் கோர்டில் கால  அவகாசம்  கேட்டு, கேட்டு,  சுப்ரீம் கோர்டும்,  தனது  தீர்ப்பு மதிக்கப்படாமல் அவகாசம் கேட்பதை உணர்ந்தோ அல்லது உணராமலே அவகாசங்களை அளித்து நியாயமான நீதிமன்றமாக நடந்து கொண்டதா என்பதை அவரவர்  மனசாட்சிக்கே  விட்டுவிடுகிறோம்.

இப்படியாக அவகாசம் வாங்கி கர்நாடக தேர்தலை சந்திக்கும் பாஜக. தேர்தலில் வெற்றியை ஈட்டுமா? அல்லது காங்கிரசிடம் தோற்குமா? அல்லது தொங்கு சட்டசபையாக மாறுமா என்பதெல்லாம் வருகின்ற மே 15  தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லி இருக்கின்றன. சில கணிப்புகள் தொங்கு சட்டசபை முடிவே வரும் என்றும் ஆரூடம் சொல்லியுள்ளன. கடும் போட்டி நிலவுகிறது.  இதில் வென்று தென்பகுதியில் காலுன்ற நினைக்கும் பாஜக கடும் போட்டியை கொடுக்கிறது.

இருந்தும் அதன்  மேல்  உள்ள விமர்சனங்கள், பொருளாதார மந்தநிலைமை, வேலைவாய்ப்பின்மை, தவறான பொருளாதாரக் கொள்கை என்று பல வீக்கான அம்சங்களினால் பெறும் வாக்கு சதவீதம் சென்ற தேர்தலைக் காட்டிலும் கூடுமா அல்லது குறையுமா என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒருவேளை காங்கிரசு வெற்றி பெற்று,  பாஜக  தோல்வி கண்டால், காவிரி பிரச்னையில் தமிழக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, கர்நாடகவிற்கு நெருக்கடி தரலாம் பாஜக.  இதன்  மூலம்  ஏதேனும்  சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால்,  அதனை  காரணம் காட்டி கர்நாடக மாநில அரசு கலைக்கப்பட்டு  ஜனாதிபதி  ஆட்சி  நடைமுறைக்கு வரலாம். அது சமயம் தனது  இராஜதந்திர நடவடிக்கைகளை ஆளும் ஆளுநர் மூலமாக இப்போது தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியைப் போல்,  ஒரு நேரடி  ஆட்சி  மத்திய அரசால் நடத்தப்படலாம்.  அது  2019  பாராளுமன்ற  தேர்தலோடு  மீண்டும்  சட்டசபை  தேர்தலை நடத்தி தனது பலத்தைக்  காட்ட  முயற்சி   செய்யலாம்.

எப்படியோ  காவிரிப் பிரச்னை  உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின்பும்  இப்படியாக  அரசியல் ஆவதற்கு நீதிமன்றம் தொடர்ந்து இடம் அளித்துக் கொண்டிருந்தால்,  அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்பதும்,  அது  இரு மாநிலங்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதும்.  தனது  உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு போதிய அழுத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

மத்திய அரசின் அரசியல் கைப்பாவையாக உச்சநீதிமன்றம் ஆகும் தவறான போக்குக்கு தலைமை நீதிபதி இடம் தரக் கூடாது.  அவரின்  அணுகுமுறை இன்றைக்கு கேள்விக்குள்ளாகி உள்ளது.  எதிர்கட்சிகள் அவரின் பால் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க துணை ஜனாதிபதியும் முறையிட்டு பலன் அளிக்காமல்,  உச்ச நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்க, அதுவும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எத்தகைய அரசியல் அழுத்தங்கள் நடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எது எப்படியோ  14ம்  தேதி  மீண்டும் விசாரணை, அதில் இறுதி முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும்.  அடங்காத மத்திய, மாநில அரசுகளை அடக்க வேண்டும். இல்லை என்றால் சட்டத்திற்கும்,  நீதிமன்றங்களுக்கும் எந்த மதிப்பும்  இராது.

பாஜக  தேர்தல் அரசியலை தள்ளி வைத்துவிட்டு,  தேர்ந்ததெடுக்கப்பட்ட  ஒரு  நல்ல  மத்திய  அரசாக செயல்பட்டால் ஏதோ 2019  ல்   ஜெயிக்காவிட்டாலும்,  கணிசமான வாக்குகளையாவது  பெற  முடியும்  என்று நம்புகிறோம்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *