ஒரு ஆன்ட்ராய்டு போன்
ஒரு ஆன்ட்ராய்டு போன் வாங்கியாச்சு!
ஸ்விட்ச் ஆன் பண்ணியவுடனே, googleன் ஆப் கள் (செயலிகள்) அதில் இருந்தன.
அந்த போனை இயக்கத் தேவையான போதுமான எல்லா செயலிகளையும் கூகுள் தந்திருந்தது. பேச, மெசேஜ் பண்ண, வீடியோ ஆடியோ போட்டோ போன்றவைகளை சேவ் பண்ண, ஈ மெயில் பண்ண, சாட் பண்ண போன்ற இன்னும் பல!
அந்த செயலிகளை டெலிட் பண்ணிவிட்டு நாமாக நம் இஷ்டத்திற்கு பிரைவேட்டாக வேறு செயலிகளை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியாது!
ஆனால் கூடுதல் செயலிகளை கொண்டு வர முடியும். முகநூல் வாட்ஸ்அப்,மெசஞ்சர்,கீ போர்டு போன்ற இன்னும்பல. இவைகளை டெலிட் பண்ண முடியும்.
நாம் பிறக்கும் போது, இதே போன்ற செயலிகளுடனேதான் பிறந்திருக்கிறோம்!
ஆசை பட, பயப்பட, பகையுணர, காமப்பட, அன்பாக இருக்க, விரோதமாக இருக்க போன்ற இன்னும் பல!
இவைகளுடன் குடித்தனம் நடத்தலாம். ஆனால் அழிக்க முடியாது.
இது போக கூடுதல் விசயங்களை நாம் வெளியிலிருந்து பெறலாம்.
போதை, கல்வி விவரனம் இன்னும் பல. இவைகளைப் பயன்படு்த்தாமலும் விட்டு விட முடியும்!
போனில் இருக்கும் ஒவ்வொரு செயலியும் ரன்னிங்கிலேயே இருக்கும். ரெஸ்டில் சும்மா இருக்காது.
அதே போல்தான் நம் மனதில் உள்ள மேற்சொன்ன செயலிகள் யாவும் ரன்னிங்கிலேயே இருக்கும். இந்த ரன்னிங்கைத்தான் எண்ண ஓட்டமாக உணர்கிறோம். அவைகளை நிறுத்த முடியாது!
இவைகளை செலக்ட் பண்ணி வேலை வாங்கும் “நாம்” என்ற ஒன்று இவைகளில் சம்பந்தப் படாமலேயே இவைகளுடன் உறவு வைத்திருப்பதை நாம் தவத்தின் மூலமாக சரியாக உணரலாம். அது கடவுளாகும்!
சமயத்தில் இந்த “நாம்”, செயலிகளை வேலை வாங்கும் போது தன்னை அந்தச் செயலியாகவே நினைத்தால் அது அகங்காரமாகும். நாம் எல்லோருமே இந்த மாதிரியான அகங்காரத்திலேயே இருப்பதால், ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொருவர் தனித்தனியாக இருப்பதாக உணர்ந்து தனிநபரை உருவாக்கிவிடுகிறோம்.
ஆனால் செயலிகளைத் தாண்டிய “நாமில்” தனிநபர்கள் இல்லை. கடவுள் மட்டுமே உள்ளார்!