[:en]எனது ஆன்மிகம் – 70 ஆர்.கே.[:]

[:en]

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது உலக நாடகச் சக்கரம். உலகம் ஒரு நாடகமேடை என்றால்,  அது நடைபெறும் காலம் எவ்வளவு என்ற கேள்வி வருகின்றது அல்லவா? சாதரண நாடங்கள் 6 மணி நேரம் கூடுதலாக போனால் 7 மணி நேரம் என்று இருக்கும். தற்போது எல்லாம் 3 மணி  நேரத்துக்கு சுருக்கிவிட்டார்கள்.  20, 30 வருடங்களுக்கு முன்பு எல்லாம் கிராமங்களில் நாடகம் நடத்துவார்கள், அது இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெறும். இப்போதும் கூட சில ஊர்களில் அத்தகைய நாடகங்கள் நடந்து வருகின்றன.  கூத்து அத்தகைய வகையைச் சார்ந்ததுதான். இப்படியாக ஒவ்வொரு பகுதிகளிலும் பல்வேறு கலை பரிமாணங்ளில் நாடகங்கள் நடந்து வருகின்றன.

அப்படியாக உலக நாடக மேடையின் நேரம் 5000 வருடங்கள் என்கிறார் பரமாத்மா சிவன். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நாடக மேடை, கடிகார சுழற்றி முறையில் நடந்து வருகிறது. 1 லிருந்து தொடங்கி 5000 வருடங்கள், மீண்டும் 1 லிருந்து தொடங்கி 5000 வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்த சுழற்சிக்கு ஆரம்பம் இல்லை,  முடிவும் இல்லை. ஏன் இல்லை என்று கேட்டீர்களானால் அதற்கு பதில் இல்லை. கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்றால் எதைச் சொல்வீர்கள். அப்படித்தான். சில கேள்விகளுக்கு அறிவுதளத்தில் உங்களால் பதில் காண முடியாது. அதைதாண்டி அதை உணர்ந்து கொள்ள ஆன்மிக உணர்வு அவசியமாகிறது.

சரி 5000 வருடங்கள் கால நிர்ணயத்தில் இயங்குகிறது.  இதில் நான்கு யுகங்கள்  வருகின்றன.  யுகங்கள் என்பது நாடக மேடையில் காட்சிகளின்  ஆரம்பம், நடு, முடிவு போல இந்த நாடக மேடையின் காட்சிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

அது சத்தியுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இப்படியாக நான்கு கால வரைக்குள் இந்த நாடக காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வோரு யுகத்திற்கும் கால நிர்ணயம் சமதையாக கொடுக்கப்பட்டுள்ளது.  1250 வருடங்கள் கொடுக்கப்படுகின்றன.  இதில் எந்த மாறுபாடும்  யாரும் செய்ய முடியாது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிப்பவர்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. சத்தியுகத்தில் 9 லட்சம்  பேர்  நடிக்கின்றனர்.  திரேதா யுகத்தில் 38 கோடி பேர் நடிக்கின்றனர்.  துவாபர மற்றும் கலியுகம்  சேர்த்து  650 கோடி பேர் நடிக்கின்றனர்.

ஆக நாடகத்தில் நடிப்பவரின் எண்ணிக்கை, ஒவ்வொரு கால  காட்டமாக உயர்ந்து முடிவில் அனைத்து ஆத்மாக்களும் நடிக்க வந்து விடுகின்றனர். அப்போது நாடகம் முடிவடைகிறது. இப்போது நாம் நாடகம் முடிவடையும் தருணத்தில் இருக்கிறோம்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *