[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 63[:]

[:en]

உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்லப்படுகிறது. அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்றால், நமது உண்மையான வீடு எது என்று கேட்க தோன்றுகிறது. பரமாத்மா சிவன் ஆத்மாக்களின் உண்மையான வீடு பரந்தாமம் என்னும் சிவபுரிதான் என்று சொல்கிறார். இதை இயேசு பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே என்று தனது பிரார்தனையில் சொல்வதை கேட்கிறோம். அனைத்து தர்மங்களும் பரலோகம், பரந்தாமம் என்ற இடமே கடவுள் இருக்கும் இடம். அதுவே அவரின் குழந்தைகள்  இருக்கும் இடம் என்று சொல்கின்றன.

சரி இந்த உலக நாடக மேடைக்கு நாம் நடிக்க வருகிறோம். ஏன் வருகிறோம்.  எதற்கு வருகிறோம்? ஆத்மாவுக்கு ஒரு இயல்பான விருப்பம். இந்த பஞ்ச தத்துவங்களோடு இணைந்து தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்வதாக இருக்கிறது. அதற்காக பரந்தாமத்தில் இருந்து இறங்கி இந்த பஞ்ச தத்துவத்தால் ஆன  உலகத்தில் நீர், நிலம், ஆகாயம், வாயு, காற்றால் ஆன இந்த உடம்பை ஆதாரமாக எடுத்து நடிக்க வருகிறது. இப்படியாக இந்த நடிப்பின் காலம் 5000 வருடங்கள் என்று பரமாத்மா சிவன் கூறுகிறார்.  ஒரு முறை காலச் சக்கரம் சுழன்று முடிவதற்கு 5000 வருடங்கள் தேவையாக உள்ளது. மீண்டும் இந்த காலசக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. இதில் என்ன மாற்றங்கள் வருகின்றன என்பதை பிறகு பார்க்கலாம்.

5000 வருடங்களுக்கு ஒரு முறை நடிக்க வந்த அனைவரும் மீண்டும் வீடு திரும்புகிறோம். ஆனால் நடிக்க வந்த நாம் வீட்டை மறந்துவிட்டோம். அப்பாவை மறந்து விட்டோம். அனைத்தையும் மறந்து, ஏதோ இந்த உலகமே சாஸ்வதம் என்பது போல் வாழ்ந்து வருகிறோம். தினந்தோறும் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்து வரும் சூழலிலும் நாம் சாஸ்வதமாக இருக்கப் போகிறோம் என்று எண்ணுகிறோம். அதற்கு காரணம் ஆத்மா அழிவில்லாதது.  அது  என்றும் சாஸ்வதமானது. அது ஒரு போதும் எதாலும் அழிக்க முடியாதது. என்றும் காலம் கடந்து இருப்பது. ஆகையால் உங்களுக்கு நான் அழிவில்லாதவன் என்ற உணர்வு இருப்பதால் பிறப்பு, இறப்பு குறித்த விழிப்பு நிலை இல்லாமல் இருக்கிறது.  உடல் வயோதிகத்தால் அழிகிறது. ஆனால் ஆன்மா மறுஜென்மம் எடுத்து வேறு ஒரு உடலை ஆதாரமாக எடுத்து தனது நடிப்பை தொடர்கிறது. இப்படியாக 5000 வருடத்தில் 84 பிறவிகளை அதிகப்பட்சமாக ஆன்மா எடுக்கிறதாக பரமாத்மா தனது ஞானத்தில் கூறுகிறார்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *