[:en]எனது ஆன்மீகம் – 59 ஆர்.கே.[:]

[:en]கடவுளின் இருப்பிடம் எது என்று அறிந்து கொண்டீர்கள். கடவுளின் உருவம் எத்தன்மையானது என்பதையும் அறிந்து கொண்டீர்கள். கடவுளின் முத்தொழில் எது என்றும்  அறிந்து கொண்டீர்கள். இப்போது கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நாம் அறிந்து கொள்வோம்.

நாம் யார்? எங்கிருந்து இந்த உலகிற்கு வந்துள்ளோம்? மீண்டும் எங்கு போகப்போகிறோம்?  எதற்காக  இந்த உலகில் இருக்கிறோம்  போன்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்திருந்தால், உண்மையில் நீங்கள் ஞானத்தை அடைய தகுதியான நபராக எடுத்துக் கொள்ளலாம். முதலில் நாம் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடவுள் பரமாத்மா பரந்தாமத்தில் இருப்பவர், சிவா என்று அறிந்து கொண்டோம். சிவா என்றால் நல்ல காரியங்களை செய்பவர் என்று அர்த்தம். கடவுள் நல்லதேயே செய்வதால் அவருக்கு சிவா என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு காரண பெயரே.  சுட்டி காட்டி அழைப்பதற்கான பெயர் அல்ல.  கடவுளுக்கு யாரும் நம்மைப் போல் பெயர் வைக்கவில்லை. அவரின் செயல்பாடால் அப்பெயர் இயற்கையாக அமைந்ததே.

கடவுள் பாரமாத்மா ஒளிப்புள்ளியாக இருப்பது போல்.  நாமும் ஒளிப்புள்ளியாகவே இருக்கிறோம். நாம் ஒளிப்புள்ளியாக இருக்கும் போது ஆத்மா என்றும். உடலோடு இருக்கும் போது ஜீவ ஆத்மா என்றும் அழைக்கப்படுகிறோம்.  பஞ்ச தத்துவத்தால் ஆனா  இந்த உடல் நமக்கு இந்த உலகில் நமது நாடக பாத்திரத்தை எடுத்து நடிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் ஒரு நாடக மேடை என்கிறார்  கடவுள்.  எல்லோருக்கும் இங்கு அவர் அவருக்கான பாத்திரங்கள் இருக்கின்றன.  அதை அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசன் முதல் ஆண்டி வரை எல்லாமே நடிப்பே. நடிப்பு முடிந்தால் வேறு ஒரு நடிப்பை நடிக்க, வேறு ஒரு இடத்திற்கு சென்று பிறக்கிறோம். இப்படியாக 5000 வருடங்கள் இந்த உலக நாடகச் சக்கரத்தில் நாம் நடித்து வருகிறோம். இது பற்றி நாம் விரிவாக பிறகு பார்க்கலாம்.

சரி நாம் ஒளிப்புள்ளியான ஆத்மா என்கிறார் கடவுள்.  நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள்.  இன்று உலகில் கிட்டத்தட்ட 700 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவரும் பரமாத்மா சிவனின் குழந்தைகளே. எனவேதான் நாம் நம் தந்தையை விட்டு பிரிந்து வெகுகாலம் ஆகிவிட்டதால் அவரை தேடிக் கொண்டே இருக்கிறோம் அல்லது அவரை முற்றிலுமாக மறந்து போய் இருக்கிறோம்.

ஆகையால் 5000 வருட முடிவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் பரமாத்மா சிவன். இந்த தெய்வீக ஞானத்தையும் பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலாயம் மூலம் கொடுத்துக் கொண்டிக்கிறார். எதற்காக இந்த பிரம்ம குமாரிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை பிறகு பார்க்கலாம். நாம் ஆத்மா,  நமது  தந்தை  பரமாத்மா. உடலுக்கு தந்தை இருப்பது போல், உயிருக்கு தந்தை சிவபரமாத்மா. நாம் இருவருமே ஒளிப்புள்ளியாகத்தான் இருக்கிறோம் என்று  கடவுள் கூறுகிறார்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *