[:en]எனது ஆன்மீகம் – 57 ஆர்.கே.[:]

[:en]பரமாத்மா சிவன் தான் ஒளிபுள்ளியாக இருப்பதால், தானே தன் அறிமுகத்தை சுயம் திரு.லேக்ராஜ் மூலம் 1936 ஆம் ஆண்டு இந்த உலகிற்கு வருகை தந்து கூறியுள்ளார். கடவுள் ஒளியாக தான் உள்ளார் என்பதை அறிவுறுத்தும் விஷயமாக, ஞாபகார்த்தமாக நாம் உலகெங்கும் அதன் அடையாளத்தை தெரிந்ததோ,  தெரியாமலோ செய்து வருகிறோம்.

உலகின் மிகப்பெரிய மதம் கிருத்தவம், அதன் ஸ்தாபகர் இயேசு கிறிஸ்து  காட்  இஸ் இலைட் என்கிறார். கடவுள் ஒளிவடிவமானவர் என்கிறார். அவர்கள் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் வழிபாட்டை செய்து வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் மெக்காவில் ஒரு ஜோதி வடிவமான கல்லை வழிபட புனித யாத்திரை செய்கின்றனர்.  கடவுளுக்கு  உருவம்  இல்லை என்பவர்கள். அங்குள்ள ஜோதி வடிவமான கல்லை தரிசிக்க செல்கின்றனர்.

இந்துக்கள்  கடவுள்  ஒளிவடிவமானவர் என்பதை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு கோயிலிலும் தீப ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  கடவுள்  ஒளிவடிவமானவர்  என்பதை  அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதன் உணர்வில், முழு உண்மையை அறிந்தார் இல்லை. முழுமை உண்மைகளையும் கடவுளே சொல்ல வேண்டியுள்ளது. கடவுள் தனது பெயரை சிவா என்கிறார்.  சிவா என்றால் நல்ல காரியங்களை செய்பவர் என்று அர்த்தம்.

சரி கடவுளின் இருப்பிடம் எது? கடவுள் எங்கு இருக்கிறார்? எப்போது இவ்வூலகத்திற்கு வருகிறார்? என்ன செய்ய வருகிறார்? என்பதை அவரே கூறுகிறார்.  குழந்தைகளே, நான் சூரிய, சந்திர மண்டலங்களை தாண்டி செம்பொன்நிறமான பிரம்ம தத்துவத்தில் இருந்து வருகிறேன். அதற்கு பரந்தாமம், பரலோகம், சிவலோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பஞ்ச தத்துவங்களையும் தாண்டிய இடம் அது. இந்த பூமிக்கும், பரந்தாமத்திற்கும் இடையில் மூன்று  உலகங்களை கடவுள் நிர்மாணிக்கிறார். அதற்கு சூட்ஷம உலகம் என்று பெயர்.

தொடரும்       முந்தயபகுதி

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *