[:en]எனது ஆன்மீகம் – 54 ஆர்.கே.[:]

[:en]கடந்த இரு வாரங்களாக எனது ஆன்மீகத் தொடர் தாமதம் ஆனதற்கு மன்னிக்க வேண்டுகிறோம். தொடர்ந்து இதன் இறுதி பாகம் இன்று முதல் தொடங்குகிறது.

கடைசி பாகமாக நான் உங்களுக்கு சொல்ல இருப்பது, பிரம்ம குமாரிகள் உலக ஆன்மிக ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் பற்றித்தான்.  இவ்வித்தியாலத்தின் தொடக்கம் 1936 ஆம் ஆண்டு சிந்து ஹதராபாத்தில் வைர வியாபாரியாக இருந்த திரு. லேக்ராஜ் என்பவரால்  ஆரம்பிக்கப்பட்டது.  இது கடவுளால் ஆரம்பிக்கப்பட்ட  அமைப்பு என்று கூறப்படுகிறது.

1975  ஆம் ஆண்டு,  எனக்கு  7  வயது இருக்கும் சமயம்.  எனது தந்தையாருடன் மதுரை புது  மண்டபத்தில் இவ்வமைப்பின் ஆன்மிக கண்காட்சி நடைபெற்று வந்தது.  அதை நானும், எனது தந்தையுமாக ஒரு மாலைப் பொழுதில் காண்பதற்கு சென்றோம்.  முதலில் அவ்வமைப்பின் கருத்துக்களை சில பல படங்கள் வழியாக அவர்களின் ஞானத்தை விளக்கிச் சொல்லுவார்கள்.  அதற்கு  படவிளக்கம் என்று பெயர்.  அப்படியாக  ஒரு படவிளக்கத்தை நாங்கள் இருவரும் பெற்றோம். அது சமயம் எனக்கு இது மிக புதுமையாக ஏதோ நமக்கு மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளதாக அறிய முடிந்தது.  அதன்பின் அவ்வமைப்பிற்கு எனது  தந்தை தொடர்ந்து சென்று வந்தார்.  என்னை  அவ்வப்போது அழைத்துச் செல்வார்.  அது சமயம்  மதுரை  மேலச்சித்திரை வீதி,  மதுரை மேற்கு கோபுரம் எதிரே ஒரு வீட்டின் மாடியில் இதன் அமைப்பின் சென்டர் செயல்பட்டு வந்தது. நாங்கள் அங்கு செல்வதை சென்டருக்கு செல்வதாக குறிப்பிடுவது வழக்கம்.

1978  ஆம்  ஆண்டு இவ்வமைப்பு மதுரை கீழமாரட் வீதிக்கு மாற்றப்பட்டது.  அங்குதான் நான் இவ்வமைப்பின் அடிப்படை ஞானமான ஏழுநாள் பாடமுறையை எடுத்துக் கொண்டேன்.  இந்த எழுநாள் பாடமுறையைப் பற்றி சுருக்கமாக வரும் நாட்களில் உங்களுக்கு சொல்லுகிறேன். 1980 ஆம்  ஆண்டு  இவ்வமைப்பு கீழவெளிவீதிக்கு மாற்றப்பட்டது.  அங்கு  மாற்றப்பட்ட  அமைப்பில் நான் ஒரு தீவிர உறுப்பினராக 15 வருட காலங்கள்  ஆன்மிக செயல்பாடுகளில் பங்கேற்றேன்.  பட்டி தொட்டி,  காடு கரை, கிராமங்கள் என்று  ஊன், உறக்கம் பாறாது  கடவுளின் அறிமுகத்தை கொடுப்பதை நமது தலையாய பணி என்பதாக பணி செய்தோம்.  ஏன்  என்றால் இது கடவுளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு.  அது யார்?  எந்த கடவுள்? எப்படிப்பட்ட கடவுள்?  எங்கே  இருக்கிறார்? அவருக்கும் நமக்குமான சம்பந்தம் என்ன என்பதையெல்லாம் உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *