[:en]எனது ஆன்மிகம் – 51[:]
[:en]
ஓஷோ ஆஷ்ரமத்தின் சென்னை பிரிவு வளர்ச்சிக்காக நான் பெங்களுரில் இருந்து வந்த இரயில்வே இன்ஜினியர் சுவாமி.பிரேம் சந்தேஷ் என்பவருடன் இணைந்து பல தியான முகாம்களை நடத்திள்ளோம். சுவாமி. பிரேம் சந்தேஷ் பெங்களுரு ஓஷோ ஆஷ்ரமத்தின் தொடர்பில் வெகுகாலம் இருந்தவர். தற்போது இரயில்வேயில் ஓய்வு பெற்று சென்னையில் இருப்பதால், ஓஷோ தியான முகாம்களின் நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால், அதை முன்னேடுக்க முயற்சிகள் செய்தார். அதற்கு முன்பாக சந்திரசேகர் என்பவர் அண்ணா நகரிலும், சென்னை கீழ்பாக்கத்தில் ஒருவரும் நடத்தி வந்தனர். அது ஓஷோவை அறிந்தவர்களுக்கு மட்டுமே என்று இருந்தது. முதல் முறையாக எல்லோருக்குமாக என்று தியான முகாம்களை பேப்பரில் விளம்பரம் செய்து நடத்தியவர் எனக்கு தெரிந்து சுவாமி.பிரேம் சந்தேஷ் மட்டுமே. தற்சமயம் ஈஸ்வர மூர்த்தி என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓஷோ தியான சென்டரை சென்னை ஆழ்வார்பேட்டையில் நடத்தி வருகிறார்.
அதற்கு முன்பாக மதுரையில் சில கூட்டங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக ஓஷோவின் ஞானம் அடைந்த தினத்தை மதுரை வில்லாபுரத்தில் உள்ள சத்திய சன்மார்க் சங்கத்தில் அனுமதி வாங்கி நடத்தினோம். அது சமயம் ரிஷிகேஷ்சில் இருந்து வந்த சுவாமி ஒருவர், அதற்கு தலைமை தாங்கினார். இப்படியாக பல நிகழ்ச்சிகளை ஓஷோவிற்காக நடத்தினோம். காரணம் அவருடைய கருத்துக்களால் பயன்பெற்றதை மக்களுக்குச் சொல்லும் முகமாக அதைச் செய்தோம்.
தமிழில் பல்வேறு அரிய ஞானகருத்துக்கள் உள்ளன, சித்தர்கள் பல விதமான உயரிய கருத்துக்களை சொல்லியுள்ளனர். தமிழில் உள்ள ஆன்மிக இலக்கியங்கள் போல் வேறு மொழிகளில் இல்லை. ஆனால் அதை எளிய மக்களிடம் கொண்டு செல்லும் யுக்தி தமிழர்களிடம் இல்லாததால் நாம் அஞ்ஞான இருளில் முழ்கியுள்ளோம். அடுத்த இனங்கள், மொழிகளின் தாக்கத்தால் சிறுமை அடைந்துள்ளோம். நமது உயரிய பெருமை நாம் அறியாது உள்ளோம். இதற்கு மற்றவர்களை குறை சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை, இதற்கான முழு பொறுப்பு நம்மிள் விவரம் அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழத்தில் ஞானக்கருத்துக்களை ஊர் ஊராக சென்று பரப்பியவர் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற விளித்த வடலுர் சுவாமி. வள்ளலார் அவர்கள், ஆனால் அவரே கடைவிரித்தேன் கொள்ளவார் இல்லை என்று கூறியுள்ளார். அத்தகைய அறியாமையின் இருளில் முழ்கி கிடப்பவர்கள்தான் தமிழர்கள். இல்லை என்றால் வள்ளலார் கருத்துக்களை உள்வாங்கி வாழத் தெரியாத சமூகமாகத்தான் இன்றும் இருக்கின்றது. காரணம் அரசியல் தலைமைகள் தமிழர் சார்ந்து இல்லை என்பது காரணமாக இருக்கலாம். மாற்றார்கள் தமிழை சொல்லி தமிழர்களை ஆளத் துடிக்கிறார்களே தவிர, உண்மையாக அவர்கள் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை. இல்லை என்றால் உலகுக்கு வழிகாட்டியாக நெடுங்காலம் இருந்த தமிழ் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்காது.
தொடரும் முந்தயபகுதி[:]