[:en]எனது ஆன்மிகம் – 50 ஆர்.கே.[:]

[:en]

எல்லா குழப்பங்களுக்கும்,  எல்லா  தெளிவுகளுக்கும் மனமே காரணம். எந்த நேரத்தில் அது குழப்பமாகவும், எப்போது அது தெளிவாகவும் வேலை செய்கிறது என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தால், நீங்கள் அதில் இருந்து எதை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதை முடிவு செய்ய முடியும். அந்த உணர்வு நிலையை நீங்கள் எட்டி பிடிக்க வேண்டுமானால் சிறிது உழைக்க வேண்டும்.

துறவு வாழ்க்கை மேற்கொண்ட புத்தர், தனது உணவு தேவைக்காக மற்றவர்களை சார்ந்து  இருக்க வேண்டிருந்தது. அது சமயம் தனது உணவு தேவைக்காக சென்ற போது,  ஒரு  குடியானவன்  புத்தரை பழித்துச் சொன்னான்.  நன்றாக இருக்கிறாய் ஏன் உழைத்து சாப்பிட வேண்டியது தானே என்றான், நான் எனது சாப்பாட்டுக்காக நிலத்தை உழுது பயிர் செய்து சாப்பிடுகிறேன். நீயும் செய்யலாம் தானே என்றான்.

அதற்கு புத்தர் நீ செய்யும் செயலைத்தான் நானும் செய்கிறேன். உன்னுடைய வேலை வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது. என்னுடைய வேலையை நீ தெரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இதுதான் வித்தியாசம், நீ நிலம் என்னும் இந்த பூமியை உழுது பயிர் செய்கிறாய்.  பலன் பெறுகிறாய்.  நான் மனம் என்னும் நிலத்தை உழுது பயிர் செய்கிறேன். அதில் கிடைக்கும் பலனை பெறுகிறேன்.

நீ மனதால் கிடைக்கக் கூடிய பலனை பெறாத நிலையில் இருக்கிறாய். நான் நிலத்தை உழாததால் உன்னை சார்ந்து இருக்கிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் எனக்கு உணவளிக்கலாம்.  நான் அதற்கு பிரதியுபகரமாக நான் மனம் கடந்து அறிந்து கொண்டுள்ள உயர் உண்மையை தானமாக தருகிறேன்  நீ அதை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். விவசாயி வாயடைத்துப் போகிறான்.

இப்படித்தான் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம். இந்த பிரபஞ்சமே சார்புடை தத்துவத்தை சார்ந்துதான் இருக்கிறது என்கிறார் ஓஷோ. அப்படியாக மனதால் கிடைக்கக் கூடிய விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள மனதை செம்மைப்படுத்த வேண்டியுள்ளது. ஒழுங்குபட்ட மனது நமக்கு நன்மையையும், கட்டற்ற மனது நமக்கு தீமைகளையும் தருகிறது. தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொறுப்பு உங்களைச் சார்ந்ததே.

ஓஷோவின் அறிமுகத்தின் மூலம், அவர் கூறிய ஞான கருத்துக்கள் மூலம் மனம் என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது. அதை உணர்ந்து, அதை கடந்து செல்வது எப்படி என்பதை நான் அறிந்து கொண்டேன். எனது மானசீக குருவாக நான் அவரை கருதினேன். ஓஷோ நவீன மனதிற்கு நல்ல வழிகாட்டியாக  உள்ளார்.  நான் மனது குழப்பமடையும் பொழுது எல்லாம், அவர் புத்தகத்தை எடுத்து சிறிது படித்தால், மனதிற்கு தெளிவு கிடைப்பதை உணர்ந்துள்ளேன்.

தொடரும்       முந்தயபகுதி

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *