[:en]எனது ஆன்மிகம் – 41 ஆர்.கே.[:]

[:en]

நான் அந்த தியான முகாமிற்குச் சென்றது 2005  ஆம் ஆண்டுவாக்கில் என்று நினைக்கிறேன். அது ஒரு டிசம்பர் மாத பனிபொழிவு உள்ள காலம். அந்த இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அதிகாலைப் பனி படர்ந்த இயற்கை சூழலை ரசித்துக் கொண்டே டீ  அருந்தி விட்டு தியான முகாமிற்கு தயார் ஆனேன்.

உண்மையில் அங்கு வருபவர்களுக்கு தங்குவதற்கு நல்ல வசதி அமைப்புகள் உண்டு.  ஒரு அறையில் இருவர் தங்கலாம்.  ஒவ்வொரு அறையிலும் அட்டாச் பாத்ரூம் இருக்கும். தண்ணீர் வசதி உண்டு. ஆகையால் உங்கள் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வுதான் உங்களுக்கு ஏற்படும். படுப்பதற்கு வேண்டிய கட்டில் வசதி இருக்கும். ஒரு அறையில் இருவர் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.

நான் தங்கிய அறையில் ஒரு வட இந்தியர் என்னோடு தங்கினார். எனக்கு ஹிந்தி மொழி தெரியும் என்றாலும், அங்கு பேசக் கூடாது என்பதால் அது பயன்படவில்லை. ஆனால் அவர் சைகையில் அவ்வப்போது தன்னை  பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார். அவர் இது மூன்றாவது முறையாக வருவதாகவும். மிகவும் சிறப்பான தியானம்  என்றும் எனக்குச் சொன்னார். நாங்கள் 10 தினங்களில் ஒரு நல்ல நண்பர்களாக ஆனோம். அதில் என்ன வித்தியாசம் என்றால் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. சைகை பாஷையிலேயே ஒரு நட்பு என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தானே.

முதல் மூன்று நாட்கள் தியானம். நமது மூச்சை கவனிப்பதாக இருந்தது. முழு நேரமும் நமது மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும். இவ்வாறு கவனித்து வந்ததில் மூன்றாவது நாள் உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்த்து எழுந்து நின்றன. உங்களின் சக்தி சேமிப்பாவதை நீங்கள் உணர முடியும். தண்ணீர் கண்ட செடிகள் எழுந்து தலை நிமிருவதைப் போல், நமது  மையிற்கால்கள்  எழுந்து நிற்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி தரும். உடலில் உள்ள சிறிய பகுதி அது. அதுவே எழுந்து ஆரோக்கியத்தை உணரும் போது, மற்ற பாகங்களை சொல்லவும் வேண்டுமோ. நான் இங்கு இன்னோரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். அங்கு வந்திருந்தவர்களில் 30 சதவீதம் பேர் ஆரோக்கிய கோளறுகளை சரிசெய்து கொள்வதற்காக வந்தவர்களாக இருந்தனர். காரணம் இத்தியானம் பல்வேறு நோய்களுக்கு ஒரு தீர்வாக இருப்பதாக நம்பப்பட்டது.

ஏன் என்றால் மனதின் ஸ்துல வடிவமே உடல். மனம் சீரானால் உடல் சீராகும். ஆகையால் மூச்சு பயிற்சியின் வாயிலாக மனக்குப்பைகள் அகன்று,  மனதின் ஸ்துல வடிவமாக உடலும் துய்மை அடைகிறது என்பதை அங்கு வருபவர்கள் அனுபவத்தில் உணர்கின்றனர்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *