[:en]எனது ஆன்மிகம் – 40 ஆர்.கே.[:]

[:en]அழகான, அமைதியான இடம் தம்ம போதி விபாசான மையம். அடர்ந்த சோலை வனத்திற்குள் தியான மண்டபம் மற்றும் பல்வேறு கட்டடிடங்கள். நான் அங்கு சென்றது ஒரு தியான முகாமில் பங்கேற்பதற்காக. என்னைப் போல் பலரும் அங்கு தியானம் பயில வருகை தந்திருந்தனர்.

நாங்கள் எல்லோரும் ஒரு இடத்தில் கூடியிருந்தோம். ஒரு நடுவயதுக்காரர் வந்து இத்தியான முகாம் பற்றி கூற ஆரம்பித்தார். 10 நாட்கள் நடக்கும் இத்தியான முகாம் முற்றிலும் இலவசமானது,  உணவு, உறையுள் எல்லாம் அவர்களுடைய பொறுப்பே. நீங்கள் அதற்காக எதுவும்  செலவு செய்யத் தேவையில்லை. ஆனால் ஒரு நிபந்தனை தியான முகாமிற்குள் செல்ல தயாராகிவிட்டீர்கள் என்றால், அதன்பின் நீங்கள் இடையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். ஆகவே இப்போதே யாரேனும் செல்ல வேண்டும் என்றால் போய் கொள்ளலாம் என்று கூறினார். அதோடு யாரோடும் பேசக் கூடாது. மொபைல் போன் உபயோகிக்க கூடாது என்றும்  கூறினார்.  முற்றிலுமாக 10 தினங்கள் உலகை மறந்து, உலக தொடர்புகள் அற்று, முழுமையாக தியானத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது முடியாதவர்கள் போய்விடலாம் என்றார்.

எனக்கு சிறிது பயம் பிடித்துக் கொண்டது. இருப்பதா, போவதா என்று ஒரே குழப்பம். இந்த விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே நண்பர்கள் சொல்லியிருந்தால், வந்திருக்க மாட்டேனே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சிலர் வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் தயாராக இருந்தனர். சிறிது நேர யோசனைக்குப்பின் நானும் தயார் என்று சொன்னேன்.

பிறகு எங்கள் பெயர், முகவரி அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. ஒரு மனு ஒன்று கொடுத்து அதை நிரப்பச் சொன்னார்கள். அதன்பின் அங்கு நடக்கப் போகும் தியானம் முகாம் குறித்து கூறினார்கள்.

அதாவது காலை 4 மணிக்கு துயில எழுப்பப்படும். தியான ஹாலுக்குச் சென்று தியானம் செய்ய வேண்டும். 6 மணிக்கு இடைவேளை இடப்படும் சிறிது தேதீர் தருவார்கள். அதை அருந்திவிட்டு மீண்டும் 15 நிமிட இடைவெளியில் ஹாலில் தியானத்தில் அமர வேண்டும். பிறகு 8 மணிக்கு இடைவேளையிடப்படும். உங்கள் காலை கடன்களை முடித்துக் கொள்ள 1 மணி நேரம் வழங்கப்படும். அதற்குள் உங்கள் காலைக் கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு காலை டிபன். அதுவும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக வழங்கமாட்டார்கள். காலை உணவு எடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் நீங்கள் தியானத்தில் அமர வேண்டும். அடுத்ததாக 12 மணிக்கு இடைவேளை 15 நிமிடத்தில் மீண்டும் கூடுதல், அடுத்தாக 2 மணிக்கு உணவு இடைவேளை. உணவு அருந்திவிட்டு மீண்டும் சிறிது ஒய்வு எடுத்துக் கொள்ளலாம். சரியாக 4 மணிக்கு டீ அல்லது காபி எடுத்துக் கொண்டு தியானம் ஆரம்பித்து தொடர்ந்து இரவு 8 மணி வரை நடக்கும். இடையில் 15 நிமிட பிரேக் கொடுக்கப்படும். அவ்வளவே. இப்படியாக தொடர் தியானம் நடந்துகொண்டே இருக்கும்.  8 மணிக்கு பிறகு உணவு உண்டபின் படுக்கைக்கு செல்லலாம். இடைப்பட்ட வேளையில் யாரும் யாருடனும் பேசக் கூடாது. தேவை என்றால் எழுதிக் காட்டலாம். இப்படியாக தொடர்ந்து இதே தினசரியில் 10 தினங்கள் தியான முகாம் நடக்கும். இந்த நேர விவரங்கள் சிறிது மாறுபடலாம். 10 வருடங்களுக்கு முன் என் நினைவில் உள்ளதை சொல்லியுள்ளேன்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *