[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]

[:en]

ஜெ.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் எனக்குள்ள தொடர்பை சொல்ல வேண்டுமானால், 2000 ஆம்  ஆண்டு  தினகரன் நாளிதழ் இணையத்தள ஆன்மிக பிரிவின் பொறுப்பாசிரியராக இருந்த சமயம்,  ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களை வலைத்தளத்தில் பதிவேற்ற அனுமதி கேட்டு அங்கு சென்று இருந்தேன்.

நான் அங்குள்ள அலுவலகத்தில் என்னை  அறிமுகப்படுத்திக் கொண்டு, நான் வந்த காரணத்தை கூறினேன். அங்கு இருந்தவர்களோ என்னை ஒரிடத்தில் அமர சொன்னார்கள். நானும் 30 நிமிட நேரம் அமர்ந்திருந்தேன். ஒருவரும் வந்து என்ன தேவைக்காக இப்படி அமர்ந்துள்ளேன் என்று கேட்கவில்லை. எனக்கோ இருப்பதா இல்லை போய்விடுவதா? இவர்கள்  ஏன்  ஒரு பதிலும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியோடு உட்கார்ந்திருந்தேன்.

அது சமயம் ஒரு வயது முதிர்ந்து பெண்மணி  வந்தார். அவர்  என்னை பார்த்தவுடன் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். நான் வந்த விவரத்தை கூறியவுடன், மிகவும் ஆச்சரியப்பட்டு என் அருகில் உட்கார்ந்து, அனைவரையும் அழைத்து, இவரை ஏன் இவ்வளவு நேரம் உட்கார வைத்தீர்கள்.  இவர் நமக்கான வேலையை செய்ய வந்துள்ளார். உலகமெங்கும் நமது கருத்துக்களை பரப்ப ஒரு பத்திரிகையில் இருந்து வந்துள்ளார். இவருக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். அனைவரும் ஏதோ  மழுப்பலான பதில்களை சொல்லிக்  கொண்டிருந்தனர். அதை காதில் போட்டுக் கொள்ளாமல் எனக்கு வேண்டிய மெட்ரீயல்களை கொண்டு வரச் செய்து, இவர் கேட்கும் எந்த ஆதரவுகளையும் செய்து தர வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளைகளை இட்டார்.

எனக்கு தேவையான மெட்ரியல், அதாவது  வசந்தம் என்று அவர்கள் ஒரு சஞ்சிகை வெளியிடுகிறார்கள். அதில் கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து கருத்துக்களும் தொடர்ந்து வெளி வருகின்றன. அதன் பிரதிகள் பலவற்றை எனக்கு கொடுத்து, அதை நான் வெளியிட்டுக் கொள்ள அனுமதி கொடுத்தார்கள்.

அவர் யார் என்று பின்னரே அறிந்து கொண்டேன்.  அவர்கள் தான் கிருஷ்ண மூர்த்தி பவுண்டேஷன் தற்போதைய தலைவி என்பதை தெரிந்து கொண்டேன்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *