[:en]எனது ஆன்மிகம் – 33 ஆர்.கே.[:]

[:en]

பிரம்ம ஞான சபை

நான் சென்னையில் தினகரன் நாளிதழ் இணையத்தள பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, ஆன்மிக பிரிவின் ஆசிரியராக இருக்கும் பொறுப்பும், அந்த பக்கத்தை வடிவமைத்து, அதை நிர்வகிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த பிரிவின் நிர்வாகி நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உடையவன் என்பதையும், அதை இவர்தான் செய்ய முடியும் என்றும் உணர்ந்து, அந்த பொறுப்பை எனக்குத் தந்தார்.

நானும் அதை சரியாக செய்ய முடியும் என்ற உறுதியுடன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அதை செய்யும் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தேன்.  அப்போது நான் அடிக்கடி சென்னை அடையாறில் உள்ள பிம்ம ஞான சபை என்ற அமைப்பிற்கு செல்வதுண்டு.

இவ்வமைப்பானது அதிகாரபூர்வமாக 1875 நவம்பரில் எலனா பிளவாத்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்,  வில்லியம் ஜட்ஸ்  மற்றும் சிலரால் சேர்ந்து  நியூயார்கில் அமைக்கப்பட்டது.  சில ஆண்டுகளின் பின்னர் ஆல்காட், பிளவாத்ஸ்கி  ஆகியோர் இந்தியாவுக்கு வந்து சென்னையில் அடையாறில் தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்.  அன்னி பெசண்ட் அம்மையார் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவ்வமைப்பானது உலக சகோதரத்துத்தையும்,  உலக ஆன்மிக அமைப்புகளின் உயர் உண்மைகளை ஆய்வு செய்யும் அமைப்பாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பாகவும் திகழ்கிறது.

ஞானி ஜெ.கிருஷ்ணமூர்த்தி இவ்வமைப்பில் அன்னிபெசண்ட் அம்மையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் சக்தியின் வருகையை அவரின் பால் ஆய்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. திரு.ஜெ.கிருஷ்ணமூர்த்தி சிறுவயது முதலே அங்கு அவர்களால் ஆன்மிக பரிசோதனைக்காக வளர்க்கப்பட்டார். ஒருநாள் அவர்கள் புத்தரின் ஆன்மாவை வரவழைக்கும் முயற்சியில் தோல்வியுற்று, ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவ்வமைப்பைவிட்டு தனியாக சென்று தனது ஆன்மிக முயற்சிகளை மேற்கொண்டார். பிற்பாடு அது ஜெ.கிருஷ்ணமூர்த்தி  பவுண்டேஷன் என்ற அமைப்பாக மாறியது.  அது தற்போது சென்னை கீரின்வேஸ் ரோடில் அமைந்துள்ளது. இதன் தாய் அமைப்பு அடையாறு தியோஷபிகல் சொசைட்டி என்று அழைக்கப்படும் பிரம்ம ஞான சபைதான்.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *