[:en]எனது ஆன்மிகம் – 32 ஆர்.கே.[:]

[:en]

நான் சென்னை வந்த பிறகும் ஒரிரு முறை கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். நான் அவருக்கு பதில் எழுதினேன். ஒரு முறை அவரைக் காண எக்மோரில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்றேன். அச்சமயம் அவர் அங்கிருந்து இலங்கை சென்று விட்டதால் நான் அவரை காணும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதற்கு முன்பாக அவர்  மதுரை அருகே உசிலம்பட்டியில் உள்ள குட்டலாடம்பட்டி என்ற சிற்றுர் அருகே இரண்டு ஏக்கரில் ஒரு புத்த ஆசிரமம் அமைத்திருந்தார். அதற்கான ஆரம்ப பணியில் இருந்தார். அது சமயம் அங்கு நான் சென்று அவரை சந்தித்து வந்தேன். அதுவே நான் அவரை சந்தித்த கடைசி வாய்ப்பு. அதன் பிறகு 15 வருடங்களுக்குப் பின் அவரின் செல்நம்பர் கிடைத்த போது பேசினேன். அவர் சென்னை போரூரில் வகுப்புகள் எடுப்பதாகவும் அங்கு நாம் சந்திக்கலாம் என்று கூறினார். அதுவும் நடக்காமல்  போனது. சமீபத்தில் அவர் மறைவு செய்தி கிடைக்கப் பெற்று,  அவரின் சந்திப்பு நடைபெறாமல் போய்விட்டதே என்று எண்ணினேன்.

மிகவும் நல்ல நண்பர். மிகவும் ஆன்மிகமானவர். அடிப்படையில் கிருத்துவ குடும்பத்தி¢ல் பிறந்தவராக இருந்தாலும், புத்தரின் பால் உள்ள ஈர்பால் பௌத்த சன்னியாசியாக போதி கயாவில் சந்நியாசம் பெற்றுக் கொண்டவர். பல நாடுகளுக்கும் சென்று பௌத்த கருத்துக்களை பரப்பியவர். சில நாட்களை நாங்கள் பழகி இருந்தாலும் அது ஒரு ஆத்மார்த்தமான சந்திப்புகள் என்பது என் நினைவில் நிற்கின்றது. இன்றும் இவரின் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட ஆஷ்ரமம் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் அமைந்து ஆன்மிக சேவை ஆற்றி வருகிறது.

தொடரும்       முந்தயபகுதி

[:de]தொடரும் முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *