[:en]எனது ஆன்மிகம் – 28 ஆர்.கே.[:]

[:en]

ஆன்மிகத்தில் குரு என்பவர் முக்கிய இடம் வகிக்கிறார். குரு இல்லாது உங்களால் எளிதாக ஆன்மிக பயிற்சியின் தடைகளை கடந்து செல்ல முடியாது. நீங்கள் எங்காவது தங்கி நின்று விடுவீர்கள் அல்லது களைப்படைந்துவிடுவீர்கள். ஆகையால் ஆன்மிக பயிற்சியை, உண்மையை தேடும் முயற்சியை தொடங்கும் முன், நல்ல குருவைத் தேடுங்கள், அவர் உண்மையான குருவாக, உண்மையை அறிந்தவராக இருந்தால் மட்டுமே நீங்கள் விரைவாக முன்னேற முடியும்.

குரு இல்லாது சத்கதி இல்லை என்பார்கள். இறைவனேயே குருவாகவும் கொள்ளலாம். ஆனால் இறைவனை குருவாக கொள்ள வேண்டிய தகுதிகள் நிறைய வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் இறைவனே உங்களுக்கு குருவாக ஆகிவிடுவார். நீங்கள் ஒருபோதும் இறைவனை குருவாக ஆக்கிக் கொள்ள முடியாது.

ஆகையால்தான் எளிய மனிதர்கள் நாம், நம்மைப் போன்று எளிய மனிதராக இருந்து, தனது முயற்சியால் உண்மையை உணர்ந்த மகான்களை, ஞானிகளை நாம் குருவாக கொள்ள வேண்டியுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம். தெய்வம் எது என்பதை உறைப்பவர் குரு. தெய்வத்தை காட்டுபவர் குரு.  ஆகையால் குரு பக்தி சிறப்பாக சொல்லப்படுகிறது. அவரின் ஆசி மிகுந்த மகத்தானதாக கருதப்படுகிறது.

உண்மை குருவை காண்பதரிது. கோடான கோடி மனிதர்களில் ஒருசிலரை உண்மையை உணர்ந்த குருக்களாக உள்ளனர். ஆகையால் இன்றைய நிலையில் நானும் குரு என்று கார்ப்ரேட் குருக்கள் அதிகம் உள்ளனர்.  ஏதேனும் சில சித்திகளை சில ஆன்மிக பயிற்சிகளை பயின்று தேர்ச்சி பெற்று, அதன் பிறகு தானும் குரு என்று அறிவித்துக் கொண்டு நவீன சாமியார்களாக உலா வருகின்றனர். அவர்கள் பின்னால் படித்த கூட்டம்தான் அதிகமாக உள்ளது. அவர்கள் பின்னால் அரசியல்வாதிகள் கூட்டம் உள்ளது. மொத்தத்தில் ஆன்மிக போர்வையில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் கூட்டம் மக்கள் சக்தியை தங்கள் கருத்தியலுக்கு ஏற்ப நடைபோடச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

உண்மை குரு ஆன்மா, பரமாத்மா தவிர வேறு உலகியல் விஷயங்களில் நாட்டம் உடையவராக இருக்கமாட்டார். அவரை அணுகி கேட்டால் சில வழிகளை சொல்வரே தவிர, அவரே அரசியல்வாதிகள் திட்டங்களுக்கு பிரதிநிதியாக செயல்பட மாட்டார்கள். இங்கு ஏன் நான் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால். நீங்கள் உண்மையான குருவை கண்டுபிடிக்க வேண்டும். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்யவே. இதனால் உங்கள்  கால நேரம் வீணாகுமே தவிர, நீங்கள் கண்ட பலன் ஒன்றும் இருக்காது.

ஆக உண்மையான குருக்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே உலகில் தோன்றுகிறார்கள். அதுவரை ஒரு ஆன்மிக சாதகனுக்கு துணையாக இருப்பது, ஏற்கனவே  இருந்த குருக்கள் சொல்லிய நு£ல்களும், வழிமுறைகளும்தான். இராமசந்திரா மிஷன் தியானத்தில் குருவிடம் சரண்டர் ஆகி, அவரே நம்மை ஆன்மிகத்தில் வழி நடத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அதன் வழியில் செல்கிறார்கள். இதில் உங்களுக்கு  ஏதேனும் அனுபவம் ஆனால் அதில் நீங்கள் பயணப்படலாம். ஆனால் இது எந்த அளவுக்கு  உங்களுக்கு  உண்மையான ஆன்மிக முன்னேற்றத்தைக்  கொடுக்கும் என்று முழுமையாக என்னால் சொல்ல முடியாது. ஆரம்பநிலையில் ஆன்மிகத்தில் நீங்கள் செல்ல இதை தேர்ந்தெடுக்கலாம். இல்லை என் உலக வாழ்க்கையில் நான்  அதிக சிரமங்களை அடையாமல் இருக்க  போதும் என்பவர்கள்  போகலாம். இங்கு உண்மையை ஆராய்ந்து அறிய வாய்ப்பு இருக்கின்றதா என்பதை நான் அறியவில்லை. அதை நீங்கள் சென்று அறிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நானே சொல்லிவிட முடியாது. அதற்கான வேலையல்ல இது.  இது ஒரு முன்னோட்டமே.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *