[:en]எனது ஆன்மிகம் – 27 ஆர்.கே.[:]

[:en]

மகரிஷ் மகேஷ் யோகி தியானத்தில் மந்திரங்கள் மூலம் நடக்கும் அதிசயங்கள், இங்கு ஒரு மஹான்  குரு வடிவத்தில் நடப்பதை அறிந்தேன். நான் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆரம்ப நிலையில் அவர்களின் உதவி நமக்கு கிடைக்கும். ஆனால் அதைப்பிடித்து முன்னேற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை விடுத்து அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கும் நமது முயற்சி எதுவும் தேவையில்லை  என்று இருந்துவிட்டால் முன்னேற்றம் எதுவும் இல்லை என்றாகி விடும்.

மாதா பிதா குரு தெய்வம் என்று நமது பழமொழி ஒன்று உள்ளது. மாத பிதா எப்படி கடவுளை காண வழி காட்டுகிறார்களே. அப்படியே குருவும் வழிகாட்டுகிறார். அதன் மூலமாக தெய்வத்தை அறிந்து கொள்கிறீர்கள். இது ஒவ்வொன்றும் நடக்கும் காலங்கள் வெவ்வேறு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையை நீங்கள் படிப்படியாகத்தான் உணர முடியும் என்பதற்காக சொல்கிறேன். விடாப்பிடியான முயற்சி, தேடும் ஆவல் இவற்றையெல்லாம் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே உண்மையை உணர முடியும்.

குரு, சிஷ்ய பாரம்பரியத்தில் உணர்த்தப்பட்ட விஷயங்கள்தான் இவை. ஆனால் நவநாகரீகப் போர்வையில் நாம் அந்த உயர்ந்த உண்மைகளை, வழிமுறைகளை தொலைத்து வருகிறோம். மேற்கத்திய வெட்டி கவர்ச்சிகளுக்கு இரையாகி வருகிறோம். அவை இறுதியாக நம்மை ஒன்றும் இல்லா படுகுழியில் தள்ளுவதைத்தான் பார்க்கிறோம். அதற்காக ஆன்மிகம் ஒன்றும் எளிய பாதை என்றும்  நினைத்துவிட வேண்டாம். ஆனால் இறுதியாக நீங்கள் நிற்கும் இடம்,   நீங்கள் உழைத்த உழைப்புக்கு தகுதியானதாக நீங்கள் அறிவீர்கள். ஆனால் உலக இன்பங்களை நாடி ஓடும் ஓட்டம் ஒன்றுமில்லை என்பதை அறிவீர்கள். அதைத்தான் மாவீரன் அலெக்சாண்டர் அறிவித்துச் சென்றான்.  உலகமெங்கும் வென்றபின் நாடு திரும்ப வழியில் இறக்கிறான். அது சமயம் சொல்லிய சொல். என் கையை வெளியே நீட்டி அடக்கம் செய்யுங்கள். நான் செல்லும் போது எதையும் கொண்டு செல்லவில்லை என்று உலகம் அறியட்டும் என்று.

ஆன்மிகத்தில் நீங்கள் சம்பாதிக்கும் விஷயங்கள் உங்களை விட்டு போகாது. ஆகையால் இதை அழிவற்ற செல்வம் என்கிறார்கள். இதை புரிந்து கொள்பவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறிது மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இதை நமது திருவள்ளுவர் அழகாக சொல்லியுள்ளார். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை என்று. பொருள் அழிந்து போகும். ஆனால் நீங்கள் சேர்க்கும் அருள் அழியாதது. அது இவ்வுடலை விட்டாலும் தொடர்ந்து உங்களோடு வந்து உங்களை காக்கிறது. இதில் நீங்கள் நம்பிக்கையைத்தான் ஆதாரமாக கொள்ள வேண்டியுள்ளது. விஞ்ஞானபூர்வமாக நிரூபியுங்கள் என்று என்னை நீங்கள் கேட்டால் அது என்னால்  இயலாது.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *