[:en]எனது ஆன்மிகம் – 25 ஆர்.கே.[:]

[:en]

ஸ்ரீ இராமச்சந்திரா

ஸ்ரீ இராமச்சந்திரா மிஷன் என்பதும் வடக்கே இருந்து வந்த ஒரு அமைப்பு தான். இது 1945 ஆம் ஆண்டு ஸ்ரீ இராமச்சந்திரா என்பவரால் ஷாஹசான்பூர் என்ற இடத்தில் தோன்றி, இன்று உலகமெங்கும் 100  அதிகமான நாடுகளில் தனது ஆன்மிக பணிகளை செய்து வருகிறது.

இது பண்டைய  இராஜயோக பயிற்சியை எளிதாக்கி பாமரனும் பயிற்சி செய்யும் விதமாக அமைத்துள்ளதால், இதை சகஜ மார்க்கம் என்று சொல்லுகின்றனர். உண்மையில் இது மிக எளிய பயிற்சி தான்.

மதுரையில் எனது நண்பர் ஒருவர் இப்பயிற்சியை மேற்கொண்டு வந்தவர் என்ற முறையில், எனக்கும் இது குறித்த தகவல்களை சொல்லுவார். ஒரு முறை இப்பயிற்சியை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

அவரின் துண்டுதலால் சரி அதையும் அறிந்து கொள்வோமே என்று ஒரு நாள் அந்த அமைப்பின் கிளை அலுவலகம் மதுரையில் கீழ வாசல் பகுதியில் அமைந்திருந்தது. அங்கு ஒரு நாள் அவர் என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு சில பேர் அமைதியாக தியானத்தில் அமர்ந்திருந்தனர். நானும் சென்று அமர்ந்து இருந்தேன். சிறிது நேரத்தில் ஒருவர் என்னை தனியாக அழைத்து சென்று விசாரித்தார். நான் புதிதாக வந்துள்ளேன் என்று கூறியவுடன் சிறிது நேரம் அமருங்கள் என்று கூறிவிட்டு  சென்று  விட்டார்.  சிறிது நேரம் கழித்து வந்த அவர், என்னிடம் என் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு, இவ்வமைப்பின் விவரங்களை சொல்ல ஆரம்பித்தார்.

முதலில் இந்த தியான பயிற்சிக்கு குருவின் மீது மிகுந்த பற்றுதலோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஏன் என்றால் குருதான் நமக்கு ஆன்மிக முன்னேற்றத்தில் உதவி புரிகிறார். ஆகையால் நாம் குருவிடம் சரண் அடைந்து, அவர் நமக்கு உதவ வேண்டிக் கொள்ள வேண்டும். மற்றவைகளை அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியது தேவை இல்லை என்றார். நான் அமைதியாக அவர் சொல்லியவற்றை கேட்டுக் கொண்டேன்.

பிறகு அவர் ஒரு பிரார்தனை வடித்தில் உள்ள சில வாசகங்களை எனக்கு சொல்லித்  தந்தார்.  அது அச்சு வடிவில் உள்ள ஒரு துண்டு பிரசுரத்தையும் கொடுத்தார். அதில் குருவிடம் நாம் வேண்டிக் கொள்வது போன்ற வாசகங்கள் அமைந்திருந்தது. இதை நன்கு மனதில் வாங்கிக் கொண்டு குருவிடம் வேண்டிக் கொண்டு, அமர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *