[:en]எனது ஆன்மிகம் – 20 ஆர்.கே.[:]

[:en]Related image

நான்கு நாட்களில் அந்த பெரியவர் செய்த வேலைகளை  சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு இளைஞர் போல அத்தனை வேலைகளையும் செய்தார். எங்களை தயார்  படுத்துவது,  உணவு தயார் செய்யவது, காய்கறிகளை நறுக்குவது, துவைப்பது என்று தன்னை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருந்தார். அவர் ஓய்ந்து இருந்து பார்க்க முடியவில்லை.  அதே சமயம் சாதனையில் ஈடுபடும் போது, தியானத்தில் கல்லாக சமைந்து இருந்தார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அத்தகைய சக்தியை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வாசியோகம் மூலம் அனுபவம் செய்ய முடியும். நான் அனுபவிக்கவில்லை என்றாலும் அனுபவித்து வருபவரை நேரில் கண்டுள்ளேன்.

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்  என்பார்கள். அந்த சிரசின் உத்தம செயல்பாட்டிற்கு உயிரின் ஊட்டத்திற்கு மூச்சுகாற்றே மூல ஆதாரம். மூச்சு காற்று நின்றுபோனால் சகலமும் நின்று போகிறது. ஆக அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் மூச்சை நீங்கள் ஒழுங்கு படித்தினால் உங்களை ஒழுங்கு படித்திக் கொள்ள  முடியும் என்பதே.

ஒழுங்கான உடல், உயிர் இதன் ஆதாரத்தில்தான் கடவுளை நீங்கள்  அறியும் முடியும், அடைய முடியும். ஆக சிவானந்த பரமஹம்சரின் இந்த வாசி யோகம் என்ற சித்த வித்தை மற்றும் சித்த வேதம் உங்களுக்கு அளிக்கப்படும் அரிய வேதம். நீங்கள் இதைத்  தேடி படிக்க வேண்டும். பல ஆன்மிக அன்பர்கள் என்னிடம் இந்த புத்தகத்தை வைத்துள்ளீர்களா? இதைத் தெரியுமா? என்று கேட்டுள்ளார்கள் என்றால் இதை பலரும் தேடி படிக்க ஆவலாக உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன். இந்த சித்த வேதம் புத்தகம் நான் மதுரையில் இருக்கும் வரை என்னோடு  இருந்தது. அதன்பின் சென்னை வரும்போது இதை எடுத்து வரவில்லை. அதோடு அதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. இப்புத்தகத்தை மதுரையில் இருந்தபோது அடிக்கடி படிப்பது உண்டு.

நாம் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் அதிகம் விரையும் செய்வது நமது சக்தியை. அது மன ஓட்டத்தின் வழியாகவும், உடல் இயக்கத்தின்  வழியாகவும் செலவாகிக்  கொண்டே இருக்கிறது. இழந்த சக்தியை நாம் மீட்டுக் கொள்வது ஆகாரத்தின்¢ வழியாகவும், மூச்சுக் காற்றின் மூலமும் தான். ஆனால் சரியான  ஆகாரத்தை உண்கிறோமா? சரியான மூச்சை இழுத்து விடுகிறோமா? என்பதே கேள்வி.

உலகின் அனைத்து உயிரினமும் செய்வது சுவாசித்தலை. சுவாசம் இல்லாமல் எந்த உயிரனமும் இல்லை. இந்த சுவாசம் ஒவ்வொரு உயிரனத்திற்கும் ஒரு நிமிடத்திற்கு இத்தனை சுவாசங்களை  எடுத்துக்  கொள்கின்றன என்கின்ற கணக்கீடு உள்ளது. அதனடியிப்படையில் எல்லா உயிரினங்களின் வாழ்நாள் இந்த உலகில் நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்விதவாக குறைவாக சுவாசத்தை மேற்கொள்ளும் உயிரினங்கள் அதிக வாழ்நாளையும், அதிகமாக சுவாசத்தை மேற்கொள்ளும் உயிரினங்கள் குறைந்த வாழ்நாளையும் கொண்டுள்ளன. சுவாச பயிற்சியின் வாயிலாக நமது சுவாசத்தின் அளவு எண்ணிக்கை குறைக்கப்பட்டு நமது ஆயுள் நீண்டதாக அமைகிறது. அதிக சக்தி உடலுக்கும் கிடைக்கிறது.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *