[:en]எனது ஆன்மிகம் – 5 ஆர்.கே.[:]

[:en]

சரி கடவுளை நீங்கள் தெரிந்து கொள்ளும் முன் நீங்கள் ஏன் கடவுளை தெரிந்து கொள்ள வேண்டும்?. இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது. இந்த கேள்விக்கு ஒவ்வொருவரிடம்  ஒவ்வொரு பதில் இருக்கும். அது உண்மையான பதிலாக இருக்க முடியுமா? சரி கடவுள் எப்படி இருக்கிறார். எங்கே இருக்கிறார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். இருக்கிறாரா அல்லது  இல்லையா? இத்தனை கேள்விகள் வருகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தேடும் முகமாக ஏதோ ஒன்றில் இருந்து தொடங்குகிறீர்கள். அது பக்தியாக இருக்கிறது. உங்கள் கேள்விகளுக்கெல்லாம் கடவுள் பதில் தருவார் என்று காத்திருக்கிறீர்கள்,   இல்லை என் தேவைகளை பூர்த்தி செய்வார் அல்லது என்னை ஆசீர்வதிப்பார் என்று காத்திருக்கிறீர்கள். அதற்காக அவருக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கிறது பக்தி. பிறகு அது  வியாபார பொருளாகவும் ஆகிறது. எனது கடவுள்  உயர்ந்தவர், உன்  கடவுள் நம்பிக்கை தவறு என்று மத துவேஷங்கள் ஆரம்பிக்கின்றன. விடை காண முடியாத கடவுளால் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்படுகிறது. கண் கட்டப்பட்டவனாக சுற்றி இருக்கின்றவர்களை தொட்டு தடவி யார் என்று கூற வேண்டும். அப்படித்தான் நீங்கள் மதங்களை ஒரு விளையாட்டுப் பொம்மையாக பாவித்து விளையாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். கடவுள் எங்கோ போய்விட்டார். உங்கள் நோக்கம் தவறுதலாக மாறி விளையாட்டாக ஆகிவிட்டது.

 

ஆக உண்மையில் நீங்கள் கடவுளை தேடும் மனிதராக இருப்பீர்கள் என்றால், உங்களால் அதற்கு விடை கண்டுபிடிக்க முடியும். ஏன் கடவுளை தேட வேண்டும் என்பது உங்களைப் பொறுத்த விஷயம். ஒவ்வொருத்தருக்கும் அந்த தேவை என்ன என்பது மாறுபடலாம். சிலருக்கு கடவுளே தேவை இல்லை என்றுகூட இருக்கலாம்.  ஆனால் நான் கடவுளை தேடுபவர்களுக்குத்தான் சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அடிப்படை தகுதிகள்

எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் சில அடிப்படையான விஷயங்கள் முக்கியமாக தேவைப்படுகின்றது. அந்த வகையில் கடவுளைச் சென்றடைய எத்தகைய தகுதிகள் அடிப்படையாக இருக்க வேண்டும். முதலில் உங்களுக்கு பால பாடமான பக்தியை நீங்கள்  முழுமையாக செய்து முடித்திருக்க வேண்டும். பக்தி தேடுதலின் முதல் படி. இதை முழு மனதுடன் நிறைவேற்றும் பட்சத்தில், கடவுளுக்கான அடுத்தபடி திறக்கிறது. ஏன் பக்தி செய்தால்தான் கடவுள் கிடைப்பாரா? இல்லாவிட்டால் கிடைக்க மாட்டாரா என்று நீங்கள் கேட்கலாம். கிடைக்கலாம்.  அது உங்களை பொறுத்த  விஷயம். விதிவிலக்காக சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் சில அடிப்படை விதிகள் என்பதில் பக்தி முதலாவதாக உள்ளது.

சரி பக்தியை எப்படிச் செய்ய வேண்டும். உளமுருகி, உள்ளன்புடன்,  கடவுளை நினைத்த மாத்திரத்தில் கண்ணீல் கண்ணீர் சுரக்க வேண்டும். அத்தகைய அன்பு  நிலையை நீங்கள் எட்ட வேண்டும். உண்மையைச்  சொன்னால்  பக்தியிலேயே நீங்கள் கடவுளை, உண்மையை உணர்ந்துவிடலாம். அது ராக்கெட் வேகத்தில் செல்வது போல. அப்படியான பக்தியை செய்து கடவுளை தரிசித்தவர்கள் ஆனேகர். உதாரணத்திற்கு பக்த மீரா, சைத்ன்யர், 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஏன் உங்கள் அண்டை அயலார், உற்றார் உறவினர்கள் கூட இருக்க  முடியும்.

தொடரும்………[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *