[:en]மோடி செல்வாக்கு சரிகிறதா? – ஆர்.கே.[:]

[:en]

பாரத பிரதமர் நரேந்திர தாமோதர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்து பிரபலமாகி, அந்த பிரபலத்தின் அடிப்படையில் பாரத பிரதமருக்கான தேர்தலில் வேட்பாளராக பா.ஜகவால் நிறுத்தப்பட்டு பிரதமராகியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியாக பாரத பிரதமராக ஆன பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 9 ம் தேதி மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வரவிருக்கிற து.
குஜராத் தேர்தல் பிஜேபிக்கு சவாலான தேர்தலாகவும், தனது அகில இந்திய இமேஜ்ஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் நிலைமை தற்சமயம் உத்ரபிரதேசத்தில் இருந்தது போல் சாதகமான சூழ்நிலை பிஜேபிக்கு இல்லை. காரணம் பிரதமர் நரேந்திர மோடி மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்து செயல்படுத்திய அத்தனை திட்டங்களும் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அவர் விரும்பும் தொழில் அதிபர்கள் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மத்திய ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் எல்லாம் நடுத்தர மற்றும் ஏழை வியாபார பெருமக்களுக்கு பெரும் தலைவலியாகவும், பாதிப்பாகவும் அமைந்திருப்பதாகவும் தகவல் வருகின்றன. இதற்கு உதாரணம் மோடி ஆண்ட குஜராத்தில் ஜிஎஸ்டியை எதிர்த்து 2 லட்சம் வியாபாரிகள் ஊர்வலாக சென்றுள்ளனர். இப்படியாக சொந்த மாநிலத்திலே எதிர்ப்பை சந்தித்துள்ளார். இப்போது அவர் சார்ந்துள்ள கட்சி தேர்தலை சந்திக்கப் போகிறது.

சொந்த கட்சி உறுப்பினரான முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா பிரதமர் மோடிக்கு எதிராக எழுதிய கட்டுரை இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் பிரதமரை கடுமையாக விமர்சித்திருந்தார். நாட்டின் பொருளாதாரம் 3.5 ஆக நடப்பில் உள்ளதாகவும், அதை 5.7 என்று தவறாக கணக்கிட கணக்கிடு முறைகள் மாற்றப்பட்டுள்ளன என்கிறார்.

நாட்டின் பொருளாதார நிலை போதிய முன்னேற்றம் இல்லை என்பதை நிதியமைச்சக அதிகாரிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பெருமைகளை உலமெங்கும் பேசி வரும் பிரதமர் மோடி நாட்டின் நிலைமையை கொஞ்சம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக கிண்டல் அடித்துள்ளார். கருப்பு பண மீட்பு, வரா கடன் மீட்பு மற்றும் பினாமி சொத்துக்கள் பறிமுதல் போன்றவையில் நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

காங்கிரசை ஊழல் கட்சி என்று ஊர் முழுக்க பரப்புரை செய்த பிரமர் மோடியால், தனது சொந்த சகா அமித்ஷா மகனின் நிறுவன ஊழல் வெளிவந்த போது பேசாது இருந்தது மக்களிடம் அவரின் செல்வாக்கு மேலும் அடி வாங்கியது. ஆக மோடியின் ஆட்சி வெறும் வெற்று வார்த்தைக் கூச்சல் என்று மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.

15 லட்சம் கோடி பணம் வங்கிக்கு வந்துள்ளதாக கூறும் மத்திய அரசு அதில் எத்தனை பேருக்கு எவ்வளவு நிதிகளை தொழில் தொடங்க, கல்வி கற்க கொடுத்தது என்பது கேள்வியாக உள்ளது. கல்விக் கடன் கேட்க சென்றால் வங்கிகளால் மாணவர்கள் அலக்கழிக்கப்படுகின்றனர். விவாசாயிகள் பட்டினி போரட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை டெல்லி நடத்தி வருகின்றனர். எந்த தீர்வும் இல்லை. மக்களிடம் பண புழக்கம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் வர்த்தகம் படுத்துள்ளது. நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையில் 40 சதவீதம் வியாபாரமே நடந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதில் இருந்தே மக்களிடம் வளமை குறைந்துள்ளதாகவும் அல்லது மக்கள் ஏதோ ஒரு அச்ச உணர்வில் தங்கள் செலவழிக்கும் சக்தியை இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இத்தகைய காலகட்டத்தில் வரும் குஜராத் தேர்தல் மோடியின் இமைஜை காப்பாற்றுமா அல்லது காற்றில்  பறக்கவிடுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

[:de]மோடி செல்வாக்கு சரிகிறதா? – ஆர்.கே.
பாரத பிரதமர் நரேந்திர தாமோதர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்து பிரபலமாகி, அந்த பிரபலத்தின் அடிப்படையில் பாரத பிரதமருக்கான தேர்தலில் வேட்பாளராக பா.ஜகவால் நிறுத்தப்பட்டு பிரதமராகியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியாக பாரத பிரதமராக ஆன பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 9 ம் தேதி மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வரவிருக்கிற து.
குஜராத் தேர்தல் பிஜேபிக்கு சவாலான தேர்தலாகவும், தனது அகில இந்திய இமேஜ்ஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் நிலைமை தற்சமயம் உத்ரபிரதேசத்தில் இருந்தது போல் சாதகமான சூழ்நிலை பிஜேபிக்கு இல்லை. காரணம் பிரதமர் நரேந்திர மோடி மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்து செயல்படுத்திய அத்தனை திட்டங்களும் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அவர் விரும்பும் தொழில் அதிபர்கள் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மத்திய ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் எல்லாம் நடுத்தர மற்றும் ஏழை வியாபார பெருமக்களுக்கு பெரும் தலைவலியாகவும், பாதிப்பாகவும் அமைந்திருப்பதாகவும் தகவல் வருகின்றன. இதற்கு உதாரணம் மோடி ஆண்ட குஜராத்தில் ஜிஎஸ்டியை எதிர்த்து 2 லட்சம் வியாபாரிகள் ஊர்வலாக சென்றுள்ளனர். இப்படியாக சொந்த மாநிலத்திலே எதிர்ப்பை சந்தித்துள்ளார். இப்போது அவர் சார்ந்துள்ள கட்சி தேர்தலை சந்திக்கப் போகிறது.
சொந்த கட்சி உறுப்பினரான முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா பிரதமர் மோடிக்கு எதிராக எழுதிய கட்டுரை இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் பிரதமரை கடுமையாக விமர்சித்திருந்தார். நாட்டின் பொருளாதாரம் 3.5 ஆக நடப்பில் உள்ளதாகவும், அதை 5.7 என்று தவறாக கணக்கிட கணக்கிடு முறைகள் மாற்றப்பட்டுள்ளன என்கிறார்.
நாட்டின் பொருளாதார நிலை போதிய முன்னேற்றம் இல்லை என்பதை நிதியமைச்சக அதிகாரிகள் ஒத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவின் பெருமைகளை உலமெங்கும் பேசி வரும் பிரதமர் மோடி நாட்டின் நிலைமையை கொஞ்சம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக கிண்டல் அடித்துள்ளார். கருப்பு பண மீட்பு, வரா கடன் மீட்பு மற்றும் பினாமி சொதுக்கள் பறிமுதல் போன்றவையில் நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
காங்கிரசை ஊழல் கட்சி என்று ஊர் முழுக்க பரப்புரை செய்த பிரமர் மோடியால், தனது சொந்த சகா அமித்ஷா மகனின் நிறுவன ஊழல் வெளிவந்த போது பேசாது இருந்தது மக்களிடம் அவரின் செல்வாக்கு மேலும் அடி வாங்கியது. ஆக மோடியின் ஆட்சி வெறும் வெற்று வார்த்தைக் கூச்சல் என்று மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர்.
15 லட்சம் கோடி பணம் வங்கிக்கு வந்துள்ளதாக கூறும் மத்திய அரசு அதில் எத்தனை பேருக்கு எவ்வளவு நிதிகளை தொழில் தொடங்க, கல்வி கற்க கொடுத்தது என்பது கேள்வியாக உள்ளது. கல்விக் கடன் கேட்க சென்றால் வங்கிகளால் மாணவர்கள் அலக்கழிக்கப்படுகின்றனர். விவாசாயிகள் பட்டினி போரட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை டெல்லி நடத்தி வருகின்றனர். எந்த தீர்வும் இல்லை. மக்களிடம் பண புழக்கம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் வர்த்தகம் படுத்துள்ளது. நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையில் 40 சதவீதம் வியாபாரமே நடந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதில் இருந்தே மக்களிடம் வளமை குறைந்துள்ளதாகவும் அல்லது மக்கள் ஏதோ ஒரு அச்ச உணர்வில் தங்கள் செலவழிக்கும் சக்தியை இழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இத்தகைய காலகட்டத்தில் வரும் குஜராத் தேர்தல் மோடியின் இமைஜை காப்பாற்றுமா அல்லது காற்றி பறக்கவிடுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *