[:en]யஷ்வந்த் சின்ஹா கட்டுரை – பா.ஜ,கவில் சலசலப்பு – ஆர். கே.[:]

[:en]

முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்ந் சின்ஹா. வாஜ்பாய் தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சி செய்த போது நிதி அமைச்சராக பணி செய்தவர்.

சமீபத்தில் அவர் பத்திரிக்கை ஒன்றில் தற்போதைய இந்திய பொருளாதரம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் இணைந்து ஆதால பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டனர் என்றும் அவர்களின் தவறான முடிவுகளால் நாடு தத்தளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இவரின் கருத்துக்களுக்கு பாஜகவில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகிறது.  பாஜகவின் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, இவரின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது. சின்ஹா சொல்வது தவறு  என்றால் அதை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என்று தனது பத்திரிக்கையான சம்னாவில் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர டெல்லி முதல்வர் அரவிந்த கெஜரிவால்,  முன்னாள் காங்கிரஸ் நிதியமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோர் சின்ஹாவின் கருத்தை ஆதரித்துள்ளனர்.  பாஜகவில் பல தலைவர்களின் கருத்தும் இதே தான் என்றும் அதை தைரியமாக எடுத்துச் சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் சின்ஹா குறிப்பிடுகிறார்.

தான் ஒரு முன்னாள் நிதியமைச்சர் என்றும், இந்நிலையிலாவது  உண்மை நிலையினை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக பிரதமர் சொல்லியிருக்க  வேண்டும் என்றும், அதை மூடி  மறைப்பதால், தான் அதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் பொருளாதார வளர்ச்சி 5.7 ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசு சொல்லியிருப்பதாகவும், இதற்கு இதன் கணக்கீட்டு செயல் முறையை அரசு மாற்றி அமைத்துள்ளதாகவும், பழைய கணக்கிட்டின்படி பார்த்தால் 3.7 ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மோடி தன்னை வறுமையின் கொடுமையை அறிந்தவன் என்று கூறிக் கொண்டு மக்களை வறுமையில் தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார். பண மதிப்பிழப்பு மற்றும் வரி சீர்திருத்தும்  எந்த விளைவையும் ஏற்படுத்துவில்லை என்றும் அது வரும்  2019 தேர்தலில் பாஜகவுக்கு மக்களிடம் எதிர்நிலை எடுக்க வகை செய்யும் என்று எச்சரித்துள்ளார். மக்கள் பொருளாதார மந்தநிலையை நன்கு உணர்ந்துள்ளனர் என்றும், இதை சரி செய்ய என்ன செய்ய போகிறார்கள் என்றும் கேள்வி கேட்டுள்ளார். அமித்ஷா சொல்வது போன்று தொழிற்நுட்ப தவறு இல்லை என்றும் எஸ்பிஐ வங்கி தலைவர்  சொல்வது போல நடைமுறை அமைப்பில் தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சின்ஹாவின் இந்த கருத்துக்கள் மிகுந்த அதிர்வலைகளை கட்சியிலும், மக்களிடையும் ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்பின்மை, தொழில் முதலீடுகள் குறைவு என்பது நாட்டின் வளர்ச்சியை எப்படி  மேம்படுத்தும் என்பது தெரியவில்லை. அதற்கான ஆக்கபூர்வமான வேலைகள் நடப்பதாகவும், அதன் தாக்கம் இருப்பதாகவும் உணர முடியவில்லை.

வங்கியில் போதுமான பணம் டெப்பாசிட்டுகளாக வந்துள்ளதாகவும், ஆனால் கடனளிப்பு வீகிதம் முன்னைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், பொருளாதார மந்த நிலை நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி சுவட்ச பாரத், சுவட் பாரத் என்று கூறிக் கொண்டிருந்தால் சுவட்ச பாரத் வந்துவிடுமா என்று தெரியவில்லை.  மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். நல்ல திட்டமிடுதலால் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இல்லையேல் காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது இடத்தை நிரப்ப.

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *