பெய்யெனப் பெய்யும் மழை

சமச்சீர் சமய நெறி என்ற கட உள் வழி பார்த்த காலத்தில் இருந்தவர் தான் வள்ளுவர் என்பதற்கு சான்று.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

குறள் விளக்கம்
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

ஏன் அவர் இந்த வகையான குறளை நமக்காக எழுதினார் என ஆராயுங்கள். அவர் காலத்தில் மதம் இல்லை ஆண் ஆதிக்கம் பெண் சோரம் என்பவை இல்லை அல்லது தவறான வகையில் வாழ்தல் வேண்டாம் என்பதாகவும்.

கட உள் வழிப்படி குடும்பப்பற்றுடன் அர்த்தநாரியாக ஆணும் பெண்ணும் தன் பிள்ளைகளுக்காக குடும்பப்பற்றுடன் தியாகம் தேவையெனில் அன்பான பெற்றோராக ஆணை தெய்வமாகவும் பெண்ணை சக்தியாகவும் இருத்தி வாழந்தால் இயற்கையும் நமக்கு கட்டுப்படும்.

இயற்கையான மழையும் பெண்ணின் மனவலிமையால் பெய்யும் என்றால் அந்தக் காலத்தில் ஆண் பெண் உறவு எந்த அளவுக்கு புனிதமாக இருந்திருக்க வேண்டும் எனப் பாருங்கள்.

கட உள் வழி சிந்தியுங்கள் ஐம்பூதங்களும் சமச்சீரான வகையில் வாழ சிந்திக்க இயலும். அப்போது அற்புதங்கள் நிகழ்வது சர்வ சாதாரணமானதாக இருக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *